Close Menu
News Axis

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    மறைமுகமாகவும் தூது விட்ட சூர்யா- தலைக்கேறிய ஈகோ

    June 21, 2025

    “கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானுவால் இணைந்தது இந்தியாவும் இலங்கையும்

    March 11, 2025

    காசாவில் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள 2500 சிறுவர்கள்.

    January 31, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp TikTok
    Friday, July 18
    Trending
    • மறைமுகமாகவும் தூது விட்ட சூர்யா- தலைக்கேறிய ஈகோ
    • “கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானுவால் இணைந்தது இந்தியாவும் இலங்கையும்
    • காசாவில் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள 2500 சிறுவர்கள்.
    • உடல் மெலிந்து, அடையாளம் தெரியாமல் மாறிப்போன சமந்தா
    • என்.பி.எம். ரணதுங்க ராஜினாமா.
    • அமெரிக்காவினால் நாடு கடத்தப்படவுள்ளவர்களின் பட்டியலில் 3000 இலங்கையர்கள்.
    •  அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு உயர்வு
    • ஹெலிகொப்டரும் விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து
    Facebook X (Twitter) Instagram WhatsApp TikTok
    News AxisNews Axis
    Follow Us
    • முகப்பு
    • அமெரிக்கா
    • சுவிஸ்
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • ஏனையவை
      • ஆரோக்கியம்
      • சினிமா
      • ஜோதிடம்
    News Axis
    Home»அமெரிக்கா»டொனால்ட் ட்ரம்பை தாக்க முயன்றதாக பிடிபட்ட நபர் யார்? அரசியல் பின்புலம் என்ன?
    அமெரிக்கா

    டொனால்ட் ட்ரம்பை தாக்க முயன்றதாக பிடிபட்ட நபர் யார்? அரசியல் பின்புலம் என்ன?

    Admin AdsBy Admin AdsSeptember 18, 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter Telegram WhatsApp Copy Link

    அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப்பை குறிவைத்து மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. டிரம்பை கொலை செய்ய முயற்சித்ததாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 58-வயதான அந்த நபர் யார் என்பது பற்றி திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

    அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. வரும் நவம்பர் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இதனால், அமெரிக்காவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகிறார்கள்.

    இதில் டொனால்டு டிரம்பிற்கு உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்புடன் சென்று கொண்டிருக்கிறது. முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக பென்சில்வேனியாவில் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் காதில் லேசான காயத்துடன் டிரம்ப் உயிர் தப்பினார்.

    டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் படையினர் சுட்டுக்கொன்றனர். உலக வல்லரசு நாடாக அறியப்படும் அமெரிக்காவில் முன்னாள் அதிபரும் தற்போதைய அதிபர் வேட்பாளரான டிரம்ப் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சர்வதே அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்து இரண்டு மாதங்களே ஆகியுள்ள நிலையில், டிரம்பை மீண்டும் கொலை செய்ய முயற்சி நடைபெற்று இருக்கிறது.

    புளோரிடாவில் உள்ள தனது வீட்டின் அருகே இருந்த கோல்ஃப் விளையாட்டு மைதானத்தில் டிரம்ப் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்த பகுதியைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. உடனடியாக உஷாரான பாதுகாப்பு படையினர், துப்பாக்கி சூடு நடத்திய நபரை குறிவைத்து பதிலடி தாக்குதல் நடத்தினர். உடனடியாக அங்கிருந்த புதர் ஒன்றில் பதுங்கியிருந்த நபர் தனது உடமைகளை அங்கேயே போட்டுவிட்டு காரில் தப்பி ஓடினார்.

    அவரை பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்தனர். அவர் பதுங்கியிருந்த புதர் பகுதியில் ஏகே 47 துப்பாக்கியும் கண்டெடுக்கப்பட்டது. அமெரிக்காவின் எப்பிஐ அமைப்பு ‘படுகொலை முயற்சி’ வழக்காகப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. 58 வயதான ரயான் ரூத் வெஸ்லி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    நார்த் கரோலினா கிரீன்ஸ் போரோவை சேர்ந்த ராயன் ரூத் கட்டுமான தொழிலாளியாக இருந்துள்ளார். அவருக்கு ராணுவத்தில் பணியாற்றிய பின்னணி எதுவும் கிடையாது. இருந்தாலும் ஆயுத சண்டையில் ஈடுபடும் என்ற ஆர்வத்துடன் இருந்து இருக்கிறார். குறிப்பாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு, உக்ரைனுக்கு ஆதரவாக சண்டையில் ஈடுபடும் ஆர்வத்துடன் இருந்தாராம்.

    தனது எக்ஸ் பதிவில் உக்ரைனுக்காக சண்டையிட்டு உயிர் தியாகம் செய்ய தயராக இருக்கிறேன் என பதிவிட்டு இருக்கிறார். மேலும் சர்வதேச மோதல்களின் போக்கை மாற்ற வேண்டும் எனக் கூறியிருக்கிறார். அவரது வாட்ஸ் அப் பயோவில், மனித உரிமைகள், ஜனநாயகம், சுதந்திரத்திற்கு ஆதரவாக ஒவ்வொருவரும் சிறிய பங்கை செய்ய வேண்டும். சீனாவுக்கு நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக உதவ வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

    வெறும் ஆன்லைனில் இப்படி பதிவிட்டது மட்டும் இன்றி கடந்த 2023 ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், உக்ரைனுக்கு ஆதரவாக பயணிக்க இருப்பதாகவும் கூறியிருக்கிறார். ரூத் வெஸ்லி ஏற்கனவே, துப்பாக்கியுடன் ஒரு கட்டிடத்திற்கு புகுந்து அனைவரையும் தடுத்து நிறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 2022-ல் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ரூத்தின் செயல் தீவிர குற்றச்சாட்டுக்களின் கீழ் வரும் என்றாலும், இந்த வழக்கின் விவரம் தெரியவில்லை.

    Follow on Facebook Follow on Instagram Follow on YouTube Follow on WhatsApp Follow on Telegram
    Share. Facebook Twitter Telegram WhatsApp Copy Link
    Previous Articleமேஷம் & தனுசு ராசிக்கு குரு வக்ர பெயர்ச்சி எப்படி இருக்கும்?
    Next Article சுவிஸ் ஜேர்மன் எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்: எல்லைக் கட்டுப்பாடுகளின் விளைவு
    Admin Ads

    Related Posts

    ஹெலிகொப்டரும் விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து

    January 30, 2025

     550 பேருக்கு அமெரிக்காவில் வாய்ப்பு..

    October 4, 2024

     225 கி.மீ. வேகத்தில் அமெரிக்காவை சுழன்றடித்த ஹெலன் சூறாவளி

    September 29, 2024

    இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்துச் செய்தி..

    September 27, 2024

    அமெரிக்கா, பிரிட்டனில் புதிய கொரோனா திரிபு – உலகம் முழுவதும் மீண்டும் பேரலையாக மாறுமா?

    September 17, 2024

    டிரம்புடன் ஒன்றாக பயணம் – முஸ்லிம் எதிர்ப்பு, இனவெறி கருத்துகளால் பிரபலமான இவர் யார்?

    September 15, 2024
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Don't Miss

    மறைமுகமாகவும் தூது விட்ட சூர்யா- தலைக்கேறிய ஈகோ

    June 21, 2025

    மௌனம் பேசியதே, பருத்திவீரன், ராம் போன்ற ஹிட் படங்களை கொடுத்த அமீர் ஒரு காலகட்டத்திற்கு பின் நடிகராகவும் தன்னை நிலைநிறுத்தி…

    “கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானுவால் இணைந்தது இந்தியாவும் இலங்கையும்

    March 11, 2025

    காசாவில் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள 2500 சிறுவர்கள்.

    January 31, 2025

    உடல் மெலிந்து, அடையாளம் தெரியாமல் மாறிப்போன சமந்தா

    January 31, 2025
    Most Popular

    நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று இலங்கைக்கு விஜயம்!

    October 2, 2024

    சடுதியாக தங்கத்தின் விலையில் ஏற்ப்பட்ட அதிகரிப்பு

    September 18, 2024

    போலந்தில் இயங்கும் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான என்டர் ஏர் (Enter Air), இலங்கைக்கும் போலாந்துக்கும் இடையிலான புதிய விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

    October 31, 2024
    Our Picks

    மறைமுகமாகவும் தூது விட்ட சூர்யா- தலைக்கேறிய ஈகோ

    June 21, 2025

    “கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானுவால் இணைந்தது இந்தியாவும் இலங்கையும்

    March 11, 2025

    காசாவில் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள 2500 சிறுவர்கள்.

    January 31, 2025

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    News Axis
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp TikTok
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
    © 2025 Newsaxistoday.com. Crafted by Akkenum Interactive.

    Type above and press Enter to search. Press Esc to cancel.