கடந்த சில நாட்களாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி வைத்தியசாலையில் நீண்டகாலமாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் புதன்கிழமை நேற்று இரவு காலமானார்.
அவரது மரணம் தொடர்பில் தற்போது டாடா குழுமத்தின் தலைவராக இருக்கும் என்.சந்திரசேகரன் வெளியிட்ட அறிக்கையில்,டாடா குழுமத்தையும், நம் நாட்டின் அடிப்படை அமைப்பையும் வடிவமைத்த அசாதாரணமான தலைவரான ரத்தன் நவல் டாடா நம்மை விட்டு விடைபெறுவது மிகுந்த துயரத்தை அளிக்கிறது.
இவருடைய மறைவு பெரும் இழப்பாகும். டாடா குழுமத்திற்கு, ரத்தன டாடா வெறும் தலைவர் என்பதை விட அதிகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது