Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- போலந்தில் இயங்கும் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான என்டர் ஏர் (Enter Air), இலங்கைக்கும் போலாந்துக்கும் இடையிலான புதிய விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
- பால்டிமோர் பால கப்பல் விபத்து
- ஒருவர் நிர்வாணமாக குளிப்பது கொடும் பாவமா? – சாஸ்திரங்கள் சொல்லும் உண்மைகள்..
- மற்றுமொரு விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்!
- பிரான்ஸ் தூதுவருடன் பிரதமர் ஹரினி அமரசூரிய சந்திப்பு..
- ரஜினியின் உடல் தற்போது சரி இல்லாத காரணத்தினால் அவர் மன நிம்மதிக்காக ஐஸ்வர்யா எடுத்த முடிவு…
- 1000 கோடியை தட்டுவாரா சூர்யா.?
- துரித உணவு உற்பத்தி நிறுனமான மெக்டொனால்டுக்கு சென்று, பிரெஞ்சு பொரியல்களை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறிய டொனால்ட்…!
Author: Admin Ads
மொடன் சாம்பியன்ஸ் லீக்கில் ஒரு ஆட்டத்தில் ஒன்பது கோல்களை அடித்த முதல் அணியாக பேயர்ன் முனிச் ஆனது. ஐரோப்பாவின் எலைட் கிளப் போட்டியின் புதிய வடிவம் செவ்வாயன்று (17) ஆரம்பமானது. இதில் பட்டத்தை வைத்திருப்பவர்களான ரியல் மாட்ரிட் மற்றும் லிவர்பூல் ஆகியவையும் வெற்றி பெற்றன. போட்டியில், ஹரி கேன் மூன்று பெனால்டிகள் உட்பட நான்கு கோல்களை அடித்தார். ஜேர்மனியின் அலையன்ஸ் அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பேயர்ன் முனிச் அணியானது குரோஷிய சாம்பியனான டினாமோ ஜாக்ரெப்பை 9-2 என்ற கணக்கில் தோற்கடித்தார். ஒரு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ஒரு அணியால் அதிக கோல்கள் அடிக்கப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகும். 2020 ஆகஸ்ட் 14 அன்று நடைபெற்ற 2019-20 UEFA சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் பார்சிலோனாவை 8-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய போது, பேயர்ன் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் எட்டு கோல்கள் அடித்த இறுதி அணியாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது இலங்கையின் சகலதுறை வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் உபாதைக்குள்ளாகியுள்ளார். காலியில் இன்று காலை ஆரம்பமான முதல் இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டின் ஆரம்ப நாள் ஆட்டத்தின் 22 ஆவது ஓவரில் வில்லியம் ஓ ரூர்க் வீசிய பந்து மெத்தியூஸின் வலது கை ஆள்காட்டி விரலில் தாக்கியது. பின்னர், பிசியோ அழைக்கப்பட்டு அவருக்கு முதற்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அதையடுத்து தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடிய மெத்தியூஸ், 24 ஆவது ஓவரில் 12 ஓட்டங்களுடன் ஓய்வு பெற்றார். அவர் மீண்டும் பேட் செய்யத் தகுதியானவர் என மதிப்பிடப்பட்டுள்ளார், எலும்பு முறிவு ஏதுமின்றி சிறிய வீக்கம் மாத்திரம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் சற்று முன்னர் வரை இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களை குவித்துள்ளது.
2025 இந்தியன் பிரீமியர் லீக் சீசனுக்கான பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு டெல்லி கேப்பிட்டல்ஸிலிருந்து அவர் வெளியேறியதைத் தொடர்ந்து, டெல்லி உரிமையுடனான ஏழு ஆண்டுகால பணியை முடித்தார். ESPNcricinfo இன் படி, முன்னாள் அவுஸ்திரேலிய நட்சத்திரம் பஞ்சாப் கிங்ஸுடன் பல ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். கடந்த சீசனின் பயிற்சியாளர்களான ட்ரெவர் பெய்லிஸ் (தலைமைப் பயிற்சியாளர்), சஞ்சய் பாங்கர் (கிரிக்கெட் மேம்பாட்டுத் தலைவர்), சார்ல் லாங்கேவெல்ட் (வேகப் பந்துவீச்சு பயிற்சியாளர்) மற்றும் சுனில் ஜோஷி (சுழல் பந்துவீச்சு பயிற்சியாளர்) ஆகியோரின் எதிர்காலம் குறித்த முடிவுகள் நிலுவையில் உள்ள நிலையில் இந்த நியமனம் வந்துள்ளது. பாண்டிங் பயிற்சியாளர்களின் மீது குறிப்பிடத்தக்க கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டனின் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2024 ஆகஸ்ட் மாதத்துக்கான நாட்டின் பணவீக்கம் 2.2% ஆக நிலையானதாக காணப்படுகிறது. விமானக் கட்டணங்களுக்கான விலைகள் உயர்ந்தன, ஆனால் எரிபொருள் விலை குறைவாலும், உணவகங்களில் குறைந்த விலைகளாலும் இந்த உயர்வு ஈடுசெய்யப்பட்டது என்று பிரிட்டனின் தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) தெரிவித்துள்ளது. சமீபத்திய புள்ளிவிவரம், பணவீக்கம் பாங்க் ஆஃப் இங்கிலாந்தின் இலக்கான 2% ஐ விட சற்று அதிகமாக உள்ளது. ஆனால் வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் உச்சத்தை விட இது கணிசமாகக் குறைவு.
பிரிக்ஸ் அதன் வர்த்தகத்தில் அமெரிக்க டொலரை ஒருங்கிணைக்காமல் ஒரு புதிய கட்டண முறையை உருவாக்கும் நோக்கில் செயல்படுகிறது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உறுதிப்படுத்தினார். புதிய கட்டண முறையானது எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளைத் தீர்ப்பதற்கு மட்டும் பயன்படுத்தப்படாது, இது முழுமையான நிதி அமைப்பாக செயல்படும் என்றும் அவர் மேலும் கூறினார். புதிய பிரிக்ஸ் கட்டண முறையானது உலகளாவிய நிதித்துறையில் ஒரு முன்னுதாரண மாற்றத்திற்கு வழிவகுக்கும். அதேநேரம், டொலர் வர்த்தகம் நிறுத்தப்படுமானால் அது அமெரிக்காவில் பல துறைகளில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. பிரிக்ஸ் முன்னணி வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் குழுவாகும். முதலில் பிரிக்ஸானது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை கொண்டிருந்தது. 2024 இல், உறுப்பு நாடுகள் 10 நாடுகளாக விரிவடைந்தன. எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய ஐந்து நாடுகள் புதிதாக…
XEC என அழைக்கப்படும் புதிய வகை கொரோனா தொற்று தற்போது 27 நாடுகளில் பரவியுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி போலந்து, நோர்வே, லக்சம்பர்க், உக்ரைன், போர்ச்சுகல், சீனா உள்ளிட்ட 27 நாடுகளைச் சேர்ந்த 500 மாதிரிகளில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் யுனைடெட் கிங்டத்தில் புதிய வகை கொரோனாமாறுபாடு வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.
லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட பல பகுதிகளில் குண்டுவெடிப்பு சம்பம் பதிவாகியுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வெடிப்புச் சம்பவங்களில் 09 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3,000 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்த சுமார் 200 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் செய்திப் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்ட “பேஜர் மெசேஜ் எக்ஸ்சேஞ்ச்” இயந்திரங்கள் ஒரே நேரத்தில் வெடிக்க செய்ததாக கூறப்படுகிறது. இதன்போது சாலைகள், வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் வீடுகளுக்கு அருகில் இந்த வெடிப்புகள் நடந்துள்ளன. இந்த குண்டுவெடிப்புகளை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடத்தியதாக ஹிஸ்புல்லா போராளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த குண்டுவெடிப்புகளில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்ஸ்டாகிராம் பதின்ம வயதினருக்காக செயல்படும் விதத்தை மாற்றியமைக்கிறது, மேலும் இளைஞர்களுக்கு மேலும் உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்புகளை வழங்குவதையும் அது உறுதி செய்துள்ளது. அதன்படி பிரபல மெட்டா நிறுவனம், 18 வயதுக்குட்பட்ட பயனர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு, சில மேம்படுத்தப்பட்ட தனியுரிமை மற்றும் Parental Guidanceகளை இப்பொது அறிமுகப்படுத்தியுள்ளது. அத்தகைய கணக்குகளின் (18 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் இன்ஸ்டா கணக்குகள்) பயனர்கள் அவர்கள் பின்தொடரும் அல்லது ஏற்கனவே இணைப்பில் இருக்கும் கணக்குகளிடம் இருந்து மட்டுமே மெசேஜ்களை பெறமுடியும். மேலும் அவர்களால் மட்டுமே ஒரு போஸ்டில் அவர்களை டேக் செய்யமுடியும். அதுமட்டுமல்லாமல் 16 வயதிற்குட்பட்ட பயனர்கள், பெற்றோரின் அனுமதியுடன் மட்டுமே இயல்புநிலை அமைப்புகளை தங்களது இன்ஸ்டா கணக்கை மாற்ற முடியும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் யாருடன் பேசி பழகுகிறார்கள் என்பதைக் கண்காணிக்கவும், இன்ஸ்டாகிராம் கணக்கை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும் உரிமை பெறுவார்கள். புதிய பதின்ம வயதினருக்கான கணக்குகள் செவ்வாய் முதல் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், இன்று முதல் தேர்தல் நடைபெறும் தினம் வரை தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்துக்குச் சென்று வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் சுமார் 97 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 14 ஆம் திகதி நிறைவடைந்துள்ளதாகவும், இதுவரை உத்தியோக பூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள், இன்று முதல் தேர்தல் நடைபெறும் தினம் வரை தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்துக்குச் சென்று வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டுள்ளார். இதே வேளை, பல்கலைக்கழகங்களின் பணியாட்குழுவினருக்கும் மாணவ, மாணவிகளுக்கும் வாக்களிப்பதை இலகுபடுத்தும் வகையில் விடுமுறை வழங்குதல் தொடர்பாக தேர்தல்…
கொழும்பு, செட்டியார் தெருவின் தகவல்களுக்கு அமைவாக கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது இன்று (18) அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 2,09,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 1,92,000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (13) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 206,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 189,500 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது. இதேவேளை, சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2,567.34 அமெரிக்க டொலர்களாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.