Author: Admin Ads

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் இருந்து 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடுவதற்காக பரீட்சை திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது பெற்றோர்கள், பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்யுமாறும் அவர்கள் கோரிக்கை விடுப்பதுடன் பெற்றோர்கள் சிலர், பரீட்சை திணைக்களத்திற்குள் சென்று கடிதம் ஒன்றையும் வழங்கியுள்ளனர் அத்துடன் பெற்றோர்கள் தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வருவதாகவும், பொலிஸாரும் கலகத் தடுப்புப் பிரிவினரும் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர் எவ்வாறாயினும் வினாத்தாள் தயாரித்த குழுவின் இணக்கப்பாட்டுடன் தொடர்புடைய 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை வழங்க பரீட்சை திணைக்களம் நேற்று தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஒருவரை பிடிக்கவில்லையா, தனக்குப் பிடித்தவருக்கு எதிராக ஒருவர் திடீரென புகழ் பெறுகிறாரா, அவரை தாக்கவேண்டுமென்றால் இன்று உலகம் பயன்படுத்தும் ஒரே ஆயுதம் இனவெறுப்பு. அதுவும், சமூக ஊடகங்கள் பயன்பாட்டுக்கு வந்தபிறகு, மனதில் பட்டதையெல்லாம் கொஞ்சமும் முன்பின் யோசிக்காமல் கொட்டிவிடும் ஒரு இடமாக சமூக ஊடகங்கள் மாறிவிட்டன. பிரபல சமூக ஊடகமான எக்ஸின் உரிமையாளரான எலான் மஸ்க் கூட, கொஞ்சமும் யோசிக்காமல், கமலா ஹரிஸையும் ஜோ பைடனையும் ஏன் யாரும் கொல்ல முயற்சிக்கவில்லை என தனது சமூக ஊடகத்தில் எழுதியதை சிலர் அறிந்திருக்கக்கூடும். அமெரிக்க தடகள வீராங்கனையான ஜோர்டன் சைல்ஸ் (Jordan Chiles) என்பவர், ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப்பதக்கம் வென்றார். ஆனால், அவரது பதக்கம் பறிக்கப்பட்டு, ரொமேனியா நாட்டவரான Ana Barbosu என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது. Court of Arbitration for Sport என்னும் அமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளது. அந்த அமைப்பின் தலைவர் ரொமேனியாவின் ஆலோசகராக பல ஆண்டுகள் செயல்பட்டுவந்தவர் ஆவார்.…

Read More

கொரோனா வைரஸின் புதிய திரிபால் மேற்கத்திய நாடுகளில் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், வரும் நாட்களில் அதன் தீவிரம் இன்னும் அதிகமாகும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் ஜெர்மனியில் அடையாளம் காணப்பட்ட எக்ஸ்.இ.சி (XEC) எனும் கோவிட் வைரஸின் புதிய திரிபு, இதுவரை பிரிட்டன், அமெரிக்கா, டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளில் பரவியுள்ளதாக, எக்ஸ் சமூக வலைதள பயனர்கள் தெரிவிக்கின்றனர். குளிர் காலத்தில் வேகமாக பரவத்தக்க சில புதிய பிறழ்வுகளை இந்த வைரஸ் கொண்டிருப்பதாகவும் தடுப்பூசிகள் பயன்பாடு காரணமாக இந்த திரிபால் மனிதர்களுக்கு தீவிரமான பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். கோவிட் தொற்றால் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்புள்ளவர்களுக்கு பிரிட்டன் சுகாதார அமைப்பான என்.ஹெச்.எஸ் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குகிறது. சமீப கால புதிய கொரோனா திரிபுகளுக்கு ஏற்ப தடுப்பூசிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. XEC எனும் இந்த புதிய திரிபு, முந்தைய ஒமிக்ரான் திரிபிலிருந்து உருவானதாகும். லண்டனில்…

Read More

சுவிஸ் நகரமொன்றில், தண்ணீரில் நச்சுப்பொருள் ஒன்று கலந்ததால், அந்த தண்ணீரை பயன்படுத்தவேண்டாம் என அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள். சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்திலுள்ள Carouge என்னுமிடத்தில், ஷவரில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணொருவரின் தலைமுடி பச்சை நிறமாக மாறவே, அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். அத்துடன், குழாயில் வந்த தண்ணீரைக் குடித்த பலருக்கு வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்பு மற்றும் தொண்டை அழற்சி முதலான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. என்ன பிரச்சினை? அதாவது, தண்ணீர்க்குழாய்களில் படிந்துள்ள அழுக்கு, உப்பு முதலானவற்றை அகற்றுவதற்காக, ஒரு ரசாயனத்தை பயன்படுத்தியுள்ளார்கள் சில அலுவலர்கள். அந்த ராசாயனம் சுடுதண்ணீரைக் கொண்டு செல்லும் குழாய்களில் கலந்துவிட்டிருக்கிறது. அது நச்சுப்பொருளாக மாற, தண்ணீரைப் பயன்படுத்தியோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அந்த ரசாயனம் கலந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்றும் பணி நடைபெற்றுவரும் நிலையில், குடிப்பது, பாத்திரம் கழுவுவது முதலான எந்த விடயத்துக்கும் அந்த தண்ணீரைப் பயன்படுத்தவேண்டாம் என பொதுமக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள். மக்களுடைய உடனடித் தேவைகளுக்காக, தெருக்களில் தண்ணீர் குழாய்களை குடிநீர் விநியோக நிறுவனங்கள் அமைத்துவருவதுடன், தண்ணீர்…

Read More

டொனால்ட் டிரம்பின் சமீபத்திய பிரசார நிகழ்வுகளில் அவருடன் லாரா லூமர் என்னும் வலதுசாரி சதி கோட்பாட்டாளர் பயணிப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. குடியரசு கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். சர்ச்சைக்குரிய லாரா லூமர், டிரம்ப் மீது செல்வாக்கு செலுத்தக் கூடுமா என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. லாரா லூமர் தனது முஸ்லிம் எதிர்ப்பு கருத்துகளுக்காக நன்கு அறியப்பட்டவர். மேலும் 9/11 என்னும் இரட்டை கோபுரம் மீதான தாக்குதல், அமெரிக்க அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட “உள் வேலை” என்று கூறியவர். இதுபோன்ற சதி கோட்பாடுகளை பரப்பி பிரபலமானவர். கடந்த புதன்கிழமைன்று (செப் 11) நியூயார்க் இரட்டை கோபுர தகர்ப்பை நினைவுகூரும் ஒரு நிகழ்வில் டிரம்ப் கலந்து கொண்டார். அவருடன் லாரா லூமரும் கலந்து கொண்டார். இது அங்கிருந்தவர்களை ஆச்சர்யப்படுத்தியது. சில அமெரிக்க ஊடகங்களில் சீற்றத்தைத் தூண்டியது. செவ்வாய்க்கிழமையன்று, அதிபர் தேர்தல் விவாதத்திற்காக சென்ற டிரம்புடன், 31 வயதான அவரும் பிலடெல்பியா…

Read More

சுவிட்சர்லாந்தில், உடற்குறைபாடு கொண்ட தங்கள் குழந்தையைக் கொலை செய்த பெற்றோருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் Aargau மாகாணத்திலுள்ள Hägglingen என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த 34 வயது நபரும் அவரது மனைவியான 32 வயதுப் பெண்ணும். 2020ஆம் ஆண்டு, மே மாதம் 6ஆம் திகதி, தங்கள் மகளைக் கொலை செய்தார்கள். அந்த மூன்று வயதுச் சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து சுயநினைவிழக்கச் செய்து, பின்அவளது மூச்சை நிறுத்தியுள்ளார்கள் அந்த தம்பதியர். பிறவியிலேயே மூளையில் இருந்த பிரச்சினையால், அந்தச் சிறுமி உடற்குறைபாட்டுடன் பிறந்திருந்தாள். தங்கள் மகள் அனுபவிக்கும் கஷ்டங்களைக் காண சகிக்காமல், அவளது, வலி, பக்கவாதம், வலிப்பு போன்ற பல பிரச்சினைகளிலிருந்து அவளை விடுவிபதற்காகவே அவர்கள் தங்கள் மகளைக் கொலை செய்ததாக அவர்களுடைய சட்டத்தரணிகள் வாதிட்டார்கள். அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்குமாறு அவர்கள் நீதிமன்றத்தைக் கோரினார்கள். ஆனால், அந்தச் சிறுமியின் நிலைமை முன்னேற வாய்ப்பு இருந்தது என்று கூறி வாதிட்ட அரசு சட்டத்தரணிகள், அவள் தங்களுக்கு…

Read More

சமீபத்தில் பிரிட்டன் பிரதமர் சர் கியர் ஸ்டாமர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வாஷிங்டனில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு ரஷ்யாவிற்குள் ஊடுருவி அதன் உள்புற இலக்குகளைத் தாக்குவதற்கு நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த யுக்ரேனை அனுமதிப்பது குறித்து சர் கியர் ஸ்டார்மர் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. யுக்ரேன் விஷயத்தில் ஒரு உத்தியில் கவனம் செலுத்துவது குறித்து இருவரும் ஆக்கப்பூர்வமாக கலந்துரையாடியதாக சர் கியர் ஸ்டாமர் கூறினார். “இரான் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகள் ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து ஆழ்ந்த கவலையை” வெளிப்படுத்துவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இரானில் தயாரிக்கப்பட்ட 70க்கும் மேற்பட்ட டிரோன்களைப் பயன்படுத்தி யுக்ரேன் முழுவதும் இரவோடு இரவாக ரஷ்யா தாக்கியது என்றும், தனது நாட்டு மக்களை பாதுகாக்க யுக்ரேனுக்கு கூடுதல் வான் பாதுகாப்பு மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் தேவை என்று யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) அன்று…

Read More

சுவிட்சர்லாந்தில், குற்றவாளி ஒருவரின் வாகனத்தைத் துரத்திச் சென்ற பொலிசார் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதை எதிர்த்து அவர் நீதிமன்றம் சென்றுள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், குடிபோதையில் வாகனம் ஓட்டிச்சென்ற ஒருவரை, பொலிசார் ஒருவர் பொலிஸ் வாகனத்தில் துரத்திச் சென்றுள்ளார். பின்னர் குற்றவாளியை அவர் கைது செய்துள்ளார். ஆனால், அவர் வேகக்கட்டுப்பாட்டை மீறி வாகனம் ஓட்டியதாகக் கூறி, அதிகாரிகள் அவருக்கு அபராதம் விதித்துள்ளார்கள். ஆகவே, தனக்கு அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து அந்த பொலிசார் பெடரல் நீதிமன்றம் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார். அவரது சட்டத்தரணிகள், இந்த வழக்கு, பொலிசார் குறைவான நேரத்தில் எவ்வளவு கடினமான முடிவுகளை எடுக்கவேண்டியுள்ளது என்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.

Read More

அமெரிக்காவில் இரவில் காணாமல் போன 3 வயது குழந்தை 100 ஏக்கர் மக்காச்சோள தோட்டத்திற்குள் தன்னந்தனியாக தவித்ததை ட்ரோன் மூலம் கண்டுபிடித்து காவல்துறையினர் மீட்டனர். விஸ்கான்சின் மாகாணத்தின் ஆல்டோ பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு 8:49 மணிக்கு தங்கள் 3 வயது மகனை காணவில்லை என பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். வீட்டின் பின்புறம் இருந்த மக்காச்சோள தோட்டத்திற்குள் குழந்தை சென்றிருக்கலாம் என அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் தெர்மல் இமேஜிங் டிரோன் மூலம் குழந்தையை தேடிய நிலையில், ஒரு மணிநேர தேடுதலுக்குப் பின் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. எந்த காயமும் இன்றி குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். வீட்டில் இருந்து அரை மைல் தொலைவில் குழந்தை இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.

Read More