Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- காசாவில் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள 2500 சிறுவர்கள்.
- உடல் மெலிந்து, அடையாளம் தெரியாமல் மாறிப்போன சமந்தா
- என்.பி.எம். ரணதுங்க ராஜினாமா.
- அமெரிக்காவினால் நாடு கடத்தப்படவுள்ளவர்களின் பட்டியலில் 3000 இலங்கையர்கள்.
- அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு உயர்வு
- ஹெலிகொப்டரும் விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து
- மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது அஜித் குமாருக்கு…
- “குளோரேட்டு” எனப்படும் அதிக அளவு இரசாயனங்கள் இருப்பதால் திரும்பப் பெறும்….(Coca-Cola)
Author: admins
காசாவில் 2500 சிறுவர்களிற்கு உடனடி மருத்துவசிகிச்சை தேவைப்படுவதாக கடந்த வருடம் ஏப்பிரல் முதல் மே மாதம் வரை காசாவில் பணியாற்றிய கலிபோர்னியாவை சேர்ந்த மருத்துவர் பெரோஸ் சித்வா தெரிவித்துள்ளார். அடுத்த சில வாரங்களில் உயிரிழக்கும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள 2500 சிறுவர்கள் உள்ளனர்,சிலர் உயிரிழந்துகொண்டிருக்கின்றனர்,சிலர் நாளை அல்லது நாளை மறுதினம் உயிரிழக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த 2500 பேரில் அனேகமானவர்களிற்கு சாதாரண சிகிச்சை போதும் என தெரிவித்துள்ள அவர் 3வயது சிறுவனிற்கு கையில் எரிகாயம் ஏற்பட்டுள்ளது, அந்த காயம் ஆறிவிட்டது,ஆனால் காயம்பட்ட திசு இரத்த ஓட்டத்தை துண்டிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது இதனால் அந்த சிறுவனிற்கு ஆபத்து என அவர் தெரிவித்துள்ளார். ஸ்டான்போர்ட் பல்கலைகழக மருத்துவமனையின் அவசரசேவை மருத்துவர் ஆயிசா கானும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி முதலாம் திகதி வரை காசாவில் மருத்துவசேவையை வழங்கியுள்ளார். அவர் கைதுண்டிக்கப்பட்ட பல சிறுவர்கள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளதுடன் அவர்களிற்கு புனர்வாழ்வு இல்லை என தெரிவித்துள்ளார்.
விவாகரத்துக்கு பின் சில வருடங்களாகவே அதாவது 2022 ஆம் ஆண்டில் தன்னுடல் தாக்க நோயான மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு குணமடைவதை நோக்கி ஒரு தைரியமான பயணத்தை மேற்கொண்டுள்ளார் சமந்தா. அதில் உடல் மெலிந்து போய் ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார் சமந்தா. சொந்தமாக ஒரு Pickleball டீமை தொடங்கி Chennai Super Champs என்று பெயர் வைத்துள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் எவ்வளவு சப்பிய, க்யூட்டா இருந்த நடிகை,இப்படி ஆயிட்டாங்களே என வருத்தத்துடன் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றன.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் என்.பி.எம். ரணதுங்க ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவினால் நாடு கடத்தப்படவுள்ளவர்களின் பட்டியலில் 300 இலங்கையர்களும் உள்ளனர் என அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கல் பிரிவு தெரிவித்துள்ளது. 2024 நவம்பர் 24ம் திகதி வரை நாடு கடத்துவதற்கான இறுதி உத்தரவிற்காக காத்திருக்கும் இதுவரை தடுத்துவைக்கப்படாத இலங்கையர்களின் எண்ணிக்கை 3065 என அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கல் பிரிவு தெரிவித்துள்ளது. சட்ட மற்றும் ஏனைய சவால்கள் காரணமாக அனைவரையும்உடனடியாக நாடு கடத்த முடியாது என தெரிவித்துள்ள ஐசிஈ புகலிடக்கோரிக்கைகள் காரணமாகவும் வெளிநாட்டு அரசாங்கங்கள் ஒத்துழைக்காததன் காரணமாகவும் நாடு கடத்துவதில் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அனைத்து நாடுகளும் குடியுரிமை குறித்து ஆராயவேண்டும்,பயண ஆவணங்களை வழங்கவேண்டும், நாடு கடத்தப்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் வரும் விமானங்களை ஏற்கவேண்டும் என அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 292.92 ரூபாவாகவும், 301.60 ரூபாவாகவும் உள்ளது. நேற்றைய தினம் (28) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 294.18 ரூபாவாகவும், 302.89 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது. மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாடுகளின் நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் வொஷிங்டன் டிசியில் சிறிய ரக பயணிகள் விமானமும் ஹெலிகொப்டரும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம் அருகே நிகழ்ந்த விபத்தில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியுள்ளது. கன்சாஸிலிருந்து வந்த விமானத்தில் பணியாளர்கள் உள்ளிட்ட 64 பேர் பயணித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விபத்துக்குள்ளான பிளாக்ஹாக் ஹெலிகொப்டரில் மூன்று அதிகாரிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.ஏ. ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான CRJ700 சிறிய ரக பயணிகள் விமானம் தாமதமாக விமான நிலையத்தை நெருங்கும்போது சிகோர்ஸ்கை H-60 என்ற ஹெலிகொப்டருடன் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகராக மட்டுமின்றி துப்பாக்கிச் சுடும் வீரர், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய வீரர், ட்ரோன் வடிவமைப்பாளர் உட்பட பன்முகம் கொண்டவராக திகழ்ந்து வரும் அஜித் குமாருக்கு, இந்திய அரசின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது அறிக்கப்பட்டுள்ளமை அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படுகின்றன. பொது சேவைத்துறையின் அனைத்து நடவடிக்கைகளிலும் அல்லது துறைகளிலும் சாதனைகள் செய்தவர்களை அங்கீகரிப்பதற்காக பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பிரதமரால் அமைக்கப்பட்ட பத்ம விருதுகள் குழுவின் பரிந்துரையின் பேரில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இவ்வருடமும் 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 19 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குளிர்பானங்கள் தயாரிப்பு நிறுவனமான கோக கோலா (Coca-Cola) ஐரோப்பா முழுவதும் உள்ள சில நாடுகளில் அதன் பானங்களில் “குளோரேட்டு” எனப்படும் அதிக அளவு இரசாயனங்கள் இருப்பதால் அவற்றை திரும்பப் பெறுவதாக செய்தி வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தயாரிப்புகளில் கோக், ஃபாண்டா, மினிட் மெய்ட், ஸ்ப்ரைட் மற்றும் டிராபிகோ பிராண்டுகள் அடங்கும் என்று கோக கோலாவின் சர்வதேச பாட்டில் மற்றும் விநியோக நடவடிக்கையின் பெல்ஜியக் கிளை தெரிவித்துள்ளது. 2024 நவம்பர் முதல் பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்தில் அதிக அளவு குளோரேட்டு கொண்ட கேன்கள் மற்றும் கண்ணாடி போத்தல்களில் கோகோ கோலா பானங்கள் விநியோகிக்கப்படுவதாக நிறுவனம் திங்களன்று தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஏதேனும் கோகோ கோலா தயாரிப்புகளில் அதிக அளவு குளோரேட்டு உள்ளதா என ஆய்வு செய்து வருவதாக உணவு தர நிர்ணய நிறுவனம் உறுதி செய்துள்ளது. குளோரேட்டு உணவுகளில் காணப்படுகிறது, ஏனெனில் இது நீர் சுத்திகரிப்பு மற்றும் உணவு…
நாட்டில் வாகன இறக்குமதி தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இவ் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. மேலும் , 1969 ஆம் ஆண்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தெற்காசியாவின் நான்காவது சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக இலங்கை கடவுச்சீட்டு பெயரிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் உலகளவில் 100 வது இடத்தில் இருந்த இலங்கை கடவுச்சீட்டு தற்போது 96 வது இடத்தில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. தற்போது இலங்கை கடவுச்சீட்டு வலுவடைந்து வருவதாக ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் தெரியவந்துள்ளது.