Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- மறைமுகமாகவும் தூது விட்ட சூர்யா- தலைக்கேறிய ஈகோ
- “கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானுவால் இணைந்தது இந்தியாவும் இலங்கையும்
- காசாவில் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள 2500 சிறுவர்கள்.
- உடல் மெலிந்து, அடையாளம் தெரியாமல் மாறிப்போன சமந்தா
- என்.பி.எம். ரணதுங்க ராஜினாமா.
- அமெரிக்காவினால் நாடு கடத்தப்படவுள்ளவர்களின் பட்டியலில் 3000 இலங்கையர்கள்.
- அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு உயர்வு
- ஹெலிகொப்டரும் விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து
Author: admins
தெற்காசியாவின் நான்காவது சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக இலங்கை கடவுச்சீட்டு பெயரிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் உலகளவில் 100 வது இடத்தில் இருந்த இலங்கை கடவுச்சீட்டு தற்போது 96 வது இடத்தில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. தற்போது இலங்கை கடவுச்சீட்டு வலுவடைந்து வருவதாக ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் தெரியவந்துள்ளது.
கலோரி பற்றாக்குறை உணவு, உடற்பயிற்சி, இனிப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை குறைக்க, உடல் கொழுப்பை குறைக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்று யாருமே கூறுவதுதான் இப்போது, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிசின் முன்னணி ஆராய்ச்சியாளரும், பல வருட அனுபவமுள்ள சுகாதார நிபுணருமான டாக்டர் ஜூலியன் ரோஸ், இவை அனைத்தும் பாதி உண்மை என்று உறுதியாகக் கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை, பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் எடை இழப்பு முறைகள் மற்றும் இணையத்தில் தோன்றும் மற்றும் வைரலாகும், எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது, ஆனால் அவ்வளவு விரைவாகவும் நிரந்தரமாகவும் இல்லை. இதற்கான காரணம் எளிதானது: இந்த தீர்வுகள் பிரச்சனையின் மூல காரணத்தை நிவர்த்தி செய்யாது சமீபத்தில், அவரது சமூக ஊடகத்தில், டாக்டர். ஜூலியன் ஒரு அசாதாரண சவாலை வெளியிட்டார்: இனிப்புகள், பீட்சா மற்றும் பாஸ்தா உள்ளிட்ட கார்போஹைட்ரேட்டுகளை சாதாரணமாக சாப்பிடுவதற்குத் திரும்பும்படி அவரைப் பின்தொடர்பவர்களைக் கேட்டுக்கொண்டார். இது எளிமையானது, மஞ்சளைக் கொண்டு 100% இயற்கையான…
வோர்ன் – முரளி’ டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க அவுஸ்திரேலிய அணி நேற்றைய தினம் இரவு நாட்டை வந்தடைந்தது. துபாயில் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அவர்கள் துபாயிலிருந்து இலங்கை திரும்பியுள்ளனர். இதன் முதல் போட்டி எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாவுள்ளது. குறித்த டெஸ்ட் தொடருக்கு மேலதிகமாக, அவுஸ்திரேலியா அணி இலங்கைக்கு எதிராக இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாட உள்ளதாக தகவல் தெளிவாகியுள்ளமை குறிப்பிடத்தது .
இலங்கை நாடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெலியத்த பகுதியில் வைத்து இன்று காலை அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்றின் உரிமை தொடர்பில் யோஷித ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த வகையில் கடந்த ஜனவரி 03 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலமொன்றை பெற்றுக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது .
கப்பலின் உரிமையாளர் கிரேஸ் ஓஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட மேலாளர் சினெர்ஜி மரைன் குழுமத்தின் மீது நீதித்துறை வழக்குத் தொடுத்த ஒரு மாதத்திற்குப் பின்னர் இந்த தீர்வு வந்துள்ளது. நீருக்கடியில் குப்பைகளை அகற்றவும், நகரின் துறைமுகத்தை மீண்டும் திறக்கவும் அரசாங்கம் செலவழித்த நிதியை மீட்டெடுக்க கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பால்டிமோர் நகரில் இருந்து கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு புறப்பட்ட டாலி என்ற கப்பலே விபத்துக்குள்ளானது.
மனித வாழ்க்கையின் ஒவ்வொரு செயலுக்கும் சாஸ்திரங்கள் விளக்கங்கள் வைத்துள்ளது. சாஸ்திரங்களின்படி, மனிதர்களுடைய அறிவுக்கு அப்பாற்பட்ட ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அவை மனித குலத்தின் நன்மைக்காக சொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. வீடு கட்டுவதற்கான வாஸ்து தொடங்கி வீடு குடியேறும் முன்பு செய்ய வேண்டிய பூஜைகள் வரை சாஸ்திரங்களில் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி அர்த்தங்களும், காரணங்களும் உள்ளன. அந்த வகையில் குளிக்கும்போது ஆடைகள் இல்லாமல் குளிப்பது சரியா என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். பழங்காலங்களில் இன்றைய காலகட்டத்தை போல ஒவ்வொரு வீடுகளிலும் குளியலறை இருக்காது. அரண்மனைகளில் தான் குளிப்பதற்கு என்று தனி இடம் அமைக்கப்பட்டிருக்கும். பொதுமக்கள் பெரும்பாலும் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளை தான் குளிப்பதற்கு பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். அங்கு ஆண்கள் கோமணம் கட்டியும், பெண்கள் இடை கட்டியும் குளிப்பார்கள். அந்த காலத்தில் குளிக்கும் இடத்தில் நீராடி கொண்டிருக்கும் போதே பூச்சிகள் தீண்டிவிடக் கூடாது என முன்னெச்சரிக்கையாக ஆடைகளை அணிந்தபடி குளிக்க சொல்வார்கள். ஏனென்றால் நிர்வாணமாக…
இந்தியாவின் மும்பையில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்து கொண்டிருந்த இந்திய விஸ்டாரா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, விமானம் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் 3.15 மணிக்கு கட்டுநாயக்கவுக்கு வரவிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தரையிறங்கும் முன் தொலைபேசி ஊடாக தகவல் வந்ததாக சிறிலங்கன் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த விமானத்தில் ஒரு சிறு குழந்தை உட்பட 108 பயணிகளும் 8 பணியாளர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த விமானம் 2.55 மணியளவில் தரையிறக்கப்பட்டதாகவும், பின்னர் விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மாரி – நொயில் டூரிஸுக்கும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பு பிரதமர் அலவலகத்தில் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. சந்திப்பின்போது இலங்கையுடனான பிரான்சின் நீண்டகால நட்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கைக்கு தொடர் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இந்த கலந்துரையாடலில் இலங்கை மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவின் 75 வருட ஆண்டு நிறைவு குறித்தும் விசேடமாக கருத்து வெளியிடப்பட்டதுடன் இரு நாடுகளுக்குமிடையிலான பல்வேறு துறைகள் சார்ந்த ஒத்துழைப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
நடிகர் தனுஷ் மற்றும் அவர் மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவும் அவர்களது திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து வாழ்கின்றனர் ..ஆனால் இவர்கள் இருவரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை, இதனால், இவர்கள் இருவருமே மீண்டும் இணைய உள்ளார்கள் என்று பேசப்பட்டது. இந்நிலையில், பிரபல பத்திரிகையாளரான சுபைர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து பேசியுள்ளார். அதில், “ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரையும் சேர்த்து வைக்க ரஜினி மற்றும் இரு தரப்பினரின் குடும்பங்களும் பல முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால், அப்போது செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. சூழல் இப்படி இருக்க இவர்கள் இருவரின் மனதிலும் தற்போது மாற்றம் ஏற்பட்டு இருவரும் இணையும் முடிவில் இருக்கிறார்கள்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா நவம்பர் 14 திரைக்கு வருகிறது. கிட்டத்தட்ட இரண்டு வருட காத்திருப்பின் பலனாக ரசிகர்கள் அதை திருவிழா போல் கொண்டாட காத்திருக்கின்றனர். ஏற்கனவே பாடல்கள் ட்ரெய்லர் வெளியாகி இருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் வேட்டையனால் தள்ளிப்போனது. அதை அடுத்து தடைகளைத் தாண்டி ரிலீஸ் ஆக இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பே படத்தின் பிரமோஷன் தொடங்கிவிட்டது. சமீபத்தில் இயக்குனரோடு இணைந்து சூர்யா கொடுத்த பேட்டியில் கூட பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது. அதன்படி மதன் கார்க்கி தன்னுடைய சோசியல் மீடியா தளத்தில் கங்குவா படம் பற்றி குறிப்பிட்டுள்ளார். இப்படத்தின் வசனகர்த்தாவான இவர் தற்போது முழு படத்தையும் பார்த்துள்ளார். ஏற்கனவே டப்பிங் போது காட்சிகளை பார்த்தேன். ஆனால் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும்…