Author: NewsAxis

வார்சா – கொழும்பு இடையிலான இந்த புதிய விமான சேவை எதிர்வரும் 2025 மார்ச் இறுதி வரை தொடர்ந்து இயங்கும் என என்டர் ஏர் கூறியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான பயண மற்றும் சுற்றுலா இணைப்புகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது. அதன் முதல் விமானமானது நேற்றைய தினம் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA)வந்தடைந்தது. விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அதற்கு நீர் வணக்கம் செலுத்தப்பட்டதுடன், இலங்கை சுற்றுலாத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய நடன நிகழ்ச்சி மூலம் அதில் பயணம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்த பயணிகள் அன்புடன் வரவேற்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசாரங்களையும் நாளை நள்ளிரவு 12 மணிக்குப்பின்னர் மேற்கொள்ள வேண்டாம் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் வேண்டுகோள் விடுத்துள்ளது. பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், ”ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னரான வன்முறைகள் குறித்து பதற்றமடைவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும்பொதுமக்கள் அமைதியாக இருக்க வேண்டும். தேர்தல் வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள் தொடர்பாக ஏற்படுகின்ற பதற்றத்திற்கு பலியாக கூடாது. தேர்தல் வன்முறைகள் இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து எங்களிற்கு எந்த தகவலும் இதுவரை கிடைக்கிவில்லை. எனினும் அதனை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். தேர்தல் காலத்தில் சமூக அமைதியை பேணவேண்டியது மிகவும் அவசியம். நாங்கள் அனைவரையும் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு அமைதியான சூழலிற்கு பங்களிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம், 18 ஆம் திகதிக்கு பின்னர் அனைத்து பிரசாரங்களும் நிறுத்தப்படவேண்டும். 18 ஆம் திகதிக்கு பின்னர் சமூக வலைத்தளங்கள் ஊடக பிரசார நடவடிக்கைகளை நிறுத்துமாறு…

Read More