Friday, January 3

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசாரங்களையும் நாளை நள்ளிரவு 12 மணிக்குப்பின்னர் மேற்கொள்ள வேண்டாம் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னரான வன்முறைகள் குறித்து பதற்றமடைவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும்
பொதுமக்கள் அமைதியாக இருக்க வேண்டும்.

தேர்தல் வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள் தொடர்பாக ஏற்படுகின்ற பதற்றத்திற்கு பலியாக கூடாது.

தேர்தல் வன்முறைகள் இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து எங்களிற்கு எந்த தகவலும் இதுவரை கிடைக்கிவில்லை.

எனினும் அதனை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். தேர்தல் காலத்தில் சமூக அமைதியை பேணவேண்டியது மிகவும் அவசியம்.

நாங்கள் அனைவரையும் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு அமைதியான சூழலிற்கு பங்களிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்,

18 ஆம் திகதிக்கு பின்னர் அனைத்து பிரசாரங்களும் நிறுத்தப்படவேண்டும். 18 ஆம் திகதிக்கு பின்னர் சமூக வலைத்தளங்கள் ஊடக பிரசார நடவடிக்கைகளை நிறுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்,

வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் சமூக வலைத்தங்களிடம் இதனை தெரிவிக்கின்றோம். இதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம்” என மேலும் தொிவித்தாா்.

Share.
Leave A Reply

Exit mobile version