ஜெய்பீம் ஞானவேல் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் இன்னும் சில தினங்களில் திரைக்கு வருகிறது.
சூப்பர் ஸ்டாருடன் இணைந்து இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பகத் பாசில் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
அதை தொடர்ந்து தற்போது படத்தின் பிரீ டிக்கெட் புக்கிங் வசூல் சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
அதிலும் ரஜினிக்கு இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதில் அமெரிக்காவில் மட்டுமே வேட்டையன் டிக்கெட் புக்கிங் 40 கோடிகளை வசூலித்துள்ளது. அதேபோல் இந்திய அளவில் 8 கோடிகள் வசூல் ஆகி இருக்கிறது.
இதை வைத்துப் பார்க்கும்போது இப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே 100 கோடியை தாண்டும் என தெரிகிறது. அதேபோல் இதன் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் கணிப்பு 400 முதல் 500 கோடியாக இருக்கிறது.
மேலும் வேட்டையன் படம் 160 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ரஜினிக்கு மட்டுமே 120 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி படத்தின் பிரீ பிசினஸ் மற்றும் டிக்கெட் புக்கிங் என அனைத்துமே தயாரிப்பு தரப்புக்கு தற்போது லாபத்தை தான் கொடுத்திருக்கிறது என்பது திருப்திகரமான விடயமே.