அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், முக்கிய தேர்தல் மாநிலங்களில் கடுமையான பிரச்சார நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
குடியரசுக் கட்சியின் வேட்பாளர் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை பென்சில்வேனியா மாநிலத்தில் வாக்காளர்களை கவரும் வகையில் ஒரு புதிய யுக்தியை கையாண்டார்.
அதே நேரத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க துணை ஜனாதிபதி ஹாரிஸ் ஜோர்ஜியாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை பென்சில்வேனியாவில் அமைந்துள்ள துரித உணவு உற்பத்தி நிறுனமான மெக்டொனால்டுக்கு சென்று, பிரெஞ்சு பொரியல்களை வாடிக்கையாளர்களுக்கு பரிமாற்றினார்.