இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மாரி – நொயில் டூரிஸுக்கும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பு பிரதமர் அலவலகத்தில் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
சந்திப்பின்போது இலங்கையுடனான பிரான்சின் நீண்டகால நட்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கைக்கு தொடர் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் இலங்கை மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவின் 75 வருட ஆண்டு நிறைவு குறித்தும் விசேடமாக கருத்து வெளியிடப்பட்டதுடன் இரு நாடுகளுக்குமிடையிலான பல்வேறு துறைகள் சார்ந்த ஒத்துழைப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.