மனித வாழ்க்கையின் ஒவ்வொரு செயலுக்கும் சாஸ்திரங்கள் விளக்கங்கள் வைத்துள்ளது. சாஸ்திரங்களின்படி, மனிதர்களுடைய அறிவுக்கு அப்பாற்பட்ட ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அவை மனித குலத்தின் நன்மைக்காக சொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
வீடு கட்டுவதற்கான வாஸ்து தொடங்கி வீடு குடியேறும் முன்பு செய்ய வேண்டிய பூஜைகள் வரை சாஸ்திரங்களில் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி அர்த்தங்களும், காரணங்களும் உள்ளன. அந்த வகையில் குளிக்கும்போது ஆடைகள் இல்லாமல் குளிப்பது சரியா என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
பழங்காலங்களில் இன்றைய காலகட்டத்தை போல ஒவ்வொரு வீடுகளிலும் குளியலறை இருக்காது. அரண்மனைகளில் தான் குளிப்பதற்கு என்று தனி இடம் அமைக்கப்பட்டிருக்கும். பொதுமக்கள் பெரும்பாலும் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளை தான் குளிப்பதற்கு பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். அங்கு ஆண்கள் கோமணம் கட்டியும், பெண்கள் இடை கட்டியும் குளிப்பார்கள்.
அந்த காலத்தில் குளிக்கும் இடத்தில் நீராடி கொண்டிருக்கும் போதே பூச்சிகள் தீண்டிவிடக் கூடாது என முன்னெச்சரிக்கையாக ஆடைகளை அணிந்தபடி குளிக்க சொல்வார்கள்.
ஏனென்றால் நிர்வாணமாக குளித்தால் ஆற்றுக்குள் ஏதேனும் விஷமுள்ள பூச்சிகள் கடித்துவிட்டால் உடனடியாக கரைக்கு ஓடி வர முடியாது. இதன் காரணமாக ஆடைகளை அணிய பெரியோர் அறிவுறுத்துவார்கள்.