உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு மார்க் ஸக்கர்பெர்க் முன்னேறினார்.
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் அறிக்கையின்படி, மெட்டா நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் உலகின் இரண்டாவது பணக்காரராக உயர்ந்தார்.
2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மெட்டாவின் பங்குகள் எதிர்பார்த்ததைவிட 23 சதவிகிதம் உயர்ந்துள்ளன. அவரது நிகர மதிப்பு 206.2 டாலராக உயர்ந்துள்ளது.
இதன்மூலம், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸைவிட 1.1 பில்லியன் டாலர் அதிகம் பெற்று, அவரை பின்னுக்குத் தள்ளி, உலகின் இரண்டாவது பணக்காரராக மார்க் ஸக்கர்பெர்க் வியாழக்கிழமையில் முன்னேறினார்.
இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து மட்டும் மெட்டாவின் பங்குகள் 70 சதவிகிதம் வரையில் உயர்ந்துள்ளன