கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் தொடரும் சீரற்ற காலநிலைக் காரணமாக 298 குடும்பங்களைச் சேர்ந்த 1,107 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.
களுத்துறை, கம்பஹா, கிளிநொச்சி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களே அதிகளவு பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் ஆகும்.
குறித்த பகுதியில் பதிவான அனர்த்தம் காரணமாக 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .