Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- போலந்தில் இயங்கும் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான என்டர் ஏர் (Enter Air), இலங்கைக்கும் போலாந்துக்கும் இடையிலான புதிய விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
- பால்டிமோர் பால கப்பல் விபத்து
- ஒருவர் நிர்வாணமாக குளிப்பது கொடும் பாவமா? – சாஸ்திரங்கள் சொல்லும் உண்மைகள்..
- மற்றுமொரு விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்!
- பிரான்ஸ் தூதுவருடன் பிரதமர் ஹரினி அமரசூரிய சந்திப்பு..
- ரஜினியின் உடல் தற்போது சரி இல்லாத காரணத்தினால் அவர் மன நிம்மதிக்காக ஐஸ்வர்யா எடுத்த முடிவு…
- 1000 கோடியை தட்டுவாரா சூர்யா.?
- துரித உணவு உற்பத்தி நிறுனமான மெக்டொனால்டுக்கு சென்று, பிரெஞ்சு பொரியல்களை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறிய டொனால்ட்…!
Author: admins
உலகில் விடை கண்டுபிடிக்க முடியாத புதிர்களில் ஒன்று மனிதனுக்கு உறக்கத்தில் வரும் கனவுகள். கனவுகள் சிலருக்கு ஆசுவாசம் அளிப்பதாகவும், பலருக்கு பீதி ஏற்படுத்துவதாகவும் உள்ளன. பொதுவாக அழமான கனவில் இருக்கும் ஒரு நபரை தொடுதல் உணர்வை ஏற்படுத்தாமல் விழிக்க செய்வது கடினம். இந்நிலையில் கனவில் ஆழ்ந்திருக்கும் நபரை அவரை விழிக்க செய்யாமலே தொடர்பு கொள்வது குறித்த ஆய்வை அமெரிக்காவின் கலிஃபொர்னியாவை சேர்ந்த ரேம்ஸ்பேஸ் என்ற நிறுவனம் மேற்கொண்டது. பொதுவாக ஆழ்ந்த கனவில் ஒரு நபர் இருந்தாலும், வெளி உலகில் பேசும் வார்த்தைகள், பாடல்கள் கனவில் ஒலிக்கும். ஆனால் அது கனவின் ஒரு பகுதியாகவே தோன்றும். கனவு கலைந்தபின் அந்த பேச்சுகள், பாடல்கள் நினைவில் பெரும்பாலும் மறைந்துவிடும். இந்நிலையில் தூக்கத்தில் அதிகம் கனவு காணும் இரு நபர்களை ஆய்வுக்கு உட்படுத்திய ரேம்ஸ்பேஸ் ஆராய்ச்சியாளர்கள், அவர்கள் ஆழ்ந்த கனவில் இருக்கும்போது அவர்களுக்கு சில வார்த்தை சமிக்ஞைகளை ஹெட்செட் மூலமாக ஏற்படுத்தியுள்ளனர். கனவில் கேட்ட அந்த…
மேஷ ராசி சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உடல் நிலையில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். விலகிச் சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் பக்குவமாக நடந்து கொள்ளவும். தேவைக்கேற்ப வரவுகள் கிடைக்கும். பெருமை நிறைந்த நாள். ரிஷப ராசி குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். கலை சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த இடையூறுகள் விலகும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். ஆடம்பரமான பேச்சுக்களை நம்பி புதிய முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. இன்பம் நிறைந்த நாள். மிதுன ராசி மனதில் சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். கல்விப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். விவசாயப் பணிகளில்…
கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100,000ஐ தாண்டியுள்ளது. சீரற்ற வானிலையால் 12 மாவட்டங்களின் 69 பிரதேச செயலகங்களில் வாழும் மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 34,492 குடும்பங்களைச் சேர்ந்த 134,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த அனர்த்தம் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
சீரற்ற வானிலை காரணமாக சில கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை நாளை மற்றும் நாளை மறுதினமும் மூடுவதற்கு கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, கம்பஹா மற்றும் களனி கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை மற்றும் நாளை மறுதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை மாத்திரம் மூடப்படும் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் கொலன்னாவ மற்றும் கடுவலை கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளையும் நாளை மறுதினமும் மூடப்படவுள்ளது.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் தொடரும் சீரற்ற காலநிலைக் காரணமாக 298 குடும்பங்களைச் சேர்ந்த 1,107 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. களுத்துறை, கம்பஹா, கிளிநொச்சி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களே அதிகளவு பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் ஆகும். குறித்த பகுதியில் பதிவான அனர்த்தம் காரணமாக 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் பைடூன் மகபன்னபொன்( Paitoon Mahapannaporn) இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதிக்கு தனதும் தாய்லாந்து அரசாங்கத்தினதும் வாழ்த்துக்களைத் தெரிவித்த தாய்லாந்து தூதுவர், தாய்லாந்து நாட்டு மன்னர் வஜிரலோங்கொன் அனுப்பிய விசேட வாழ்த்துச் செய்தியையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்திருந்தார். இன்னிலையில் இலங்கையின் புதிய ஜனாதிபதியின் ஆட்சிக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்த தாய்லாந்து தூதுவர், புதிய அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளை நனவாக்குவதற்கு தாய்லாந்து அரசாங்கம் ஆதரவளிக்கும் எனவும் தெரிவித்தார். இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையில் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் (FTA) நன்மைகள் பற்றியும் தாய்லாந்து தூதுவர் விளக்கமளித்ததுடன், அது பரஸ்பர பொருளாதார நன்மைகளை ஏற்படுத்தும் எனவும் வலியுறுத்தினார்.
கடந்த சில நாட்களாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி வைத்தியசாலையில் நீண்டகாலமாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் புதன்கிழமை நேற்று இரவு காலமானார். அவரது மரணம் தொடர்பில் தற்போது டாடா குழுமத்தின் தலைவராக இருக்கும் என்.சந்திரசேகரன் வெளியிட்ட அறிக்கையில்,டாடா குழுமத்தையும், நம் நாட்டின் அடிப்படை அமைப்பையும் வடிவமைத்த அசாதாரணமான தலைவரான ரத்தன் நவல் டாடா நம்மை விட்டு விடைபெறுவது மிகுந்த துயரத்தை அளிக்கிறது. இவருடைய மறைவு பெரும் இழப்பாகும். டாடா குழுமத்திற்கு, ரத்தன டாடா வெறும் தலைவர் என்பதை விட அதிகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது
ஜெய்பீம் ஞானவேல் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் இன்னும் சில தினங்களில் திரைக்கு வருகிறது. சூப்பர் ஸ்டாருடன் இணைந்து இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பகத் பாசில் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அதை தொடர்ந்து தற்போது படத்தின் பிரீ டிக்கெட் புக்கிங் வசூல் சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதிலும் ரஜினிக்கு இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதில் அமெரிக்காவில் மட்டுமே வேட்டையன் டிக்கெட் புக்கிங் 40 கோடிகளை வசூலித்துள்ளது. அதேபோல் இந்திய அளவில் 8 கோடிகள் வசூல் ஆகி இருக்கிறது. இதை வைத்துப் பார்க்கும்போது இப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே 100 கோடியை தாண்டும் என தெரிகிறது. அதேபோல் இதன் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் கணிப்பு 400 முதல் 500 கோடியாக இருக்கிறது. மேலும் வேட்டையன் படம் 160 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ரஜினிக்கு மட்டுமே…
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்முறையாக தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ஆரம்பத்திலேயே அதிரடி என்பது போல் இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த 24 மணி நேரத்திலேயே முதல் எலிமினேஷன் நடைபெற்று இருக்கிறது. அதுவும் மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு பெண்ணாக நடித்த சச்சனாவை எலிமினேட் செய்திருக்கிறார்கள். இது எதேர்ச்சையாக நடந்தது இல்லை, திட்டமிட்டு தான் நடந்திருக்கிறது என பலரும் தங்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள். கமல் இடத்தில் விஜய் சேதுபதி எப்படி, இவர் எப்படி இந்த மாதிரியான நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எல்லோருக்குமே சந்தேகம் இருந்தது. ஆனால் மனுஷன் ஒரே நாளில் மொத்த பிக் பாஸ் ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்து விட்டார். விஜய் சேதுபதி வளவள என்று பேசுவார், காமெடி பண்ணுவார் என்று தான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் விஜய் சேதுபதியும் முதல் எபிசோடில் பேசிய அத்தனையுமே மக்களை…
தமிழ் சினிமாவில் டிஷ்யூம் தொடங்கி கோ, சிவா மனசுல சக்தி, ஜிப்ஸி என பன்முக கதாப்பாத்திரங்கள் கொண்ட பல படங்களில் நடித்து வருகிறார் ஜீவா. தற்போது ஜீவா – ஆக்ஷன் கிங் அர்ஜூன் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷன் தயாரிக்கும் இந்த படத்தை பாடலாசிரியர் பா.விஜய் இயக்குகிறார். இதில் ராஷி கண்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படம் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதை பார்க்கும்போது அது ஒரு பீரியட் பேண்டசி டிராமா கதைகளமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஹாலிவுட்டில் வெளியான இண்டியானா ஜோன்ஸ் போன்ற பீரியட் சாகச படமாக ‘அகத்தியா’ உருவாகி வருவதாக தெரிகிறது.