Author: admins

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் தலைமையிலான குழுவினர் ஒக்டோபர் 4-ஆம் திகதி வரை நாட்டில் தங்க உள்ளனர். அவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் புதிய அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்களை சந்திக்க உள்ளனர். இந்த விஜயத்தின் போது, இலங்கையின் புதிய பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இலங்கை பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத், நிதியத்தின் வேலைத்திட்டம் தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் மாத்திரமே நிதியத்தின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Read More

மேஷ ராசி உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். கால்நடை வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். தாமதம் நிறைந்த நாள். ரிஷப ராசி பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். தனவரவு தாராளமாக இருக்கும். வாகனங்களால் முன்னேற்றம் ஏற்படும். பெரியோர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நிர்வாக துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த தயக்கங்கள் குறையும். லாபம் நிறைந்த நாள். மிதுன ராசி வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பார்ப்புகளில் இருந்துவந்த தடைகள் விலகும். மேல்நிலைக் கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாகன பிரச்சனைகள் குறையும். வாசனை திரவியங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். முயற்சிக்கு உண்டான…

Read More

சமீபத்தில் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஜனாதிபதி அறிவித்ததாக புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் பிரச்சினைக்காக பெற்றோர்கள் தெரிவித்தனர். நேற்றய தினம் பிற்பகல் ஜனாதிபதியை சந்தித்த போதே இந்த தீர்மானத்தை தமக்கு அறிவித்ததாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் பிரச்சினைக்கு தீர்வைக் கோரி நேற்று பத்தரமுல்லை மற்றும் கொழும்பில் பெற்றோர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது .

Read More

பிரபல நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டமையால் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய வயிறு தொடர்பான பிரச்சனை காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்துக்கு வைத்தியசாலையில் வயிறு தொடர்பான பிரச்சனை காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்துக்கு வைத்தியசாலையில் சில பரிசோதனைகள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More

கொழும்பு வாழைத்தோட்டம் பிரதேசத்தில் உள்ள வாகனங்கள் பழுதுபார்க்கும் இடத்தில் நடைபெற்ற முகநூல் ஊடாக ஒழுக்கமைக்கப்பட்ட களியாட்டம் நிகழ்வில் கலந்து கொண்ட 18 பாடசாலை மாணவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர். ராகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொட்டாஞ்சேனை, புளுமண்டல், தெமட்டகொடை, வெல்லம்பிட்டி மற்றும் கொலன்னாவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 15 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 16 மாணவர்களும் 02 மாணவிகளும் காணப்படுவதாக பொலிஸார் மேலும் , தெரிவித்தனர்.

Read More

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளரான சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது. அதற்கமைய, சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்த கிரிஸ் சில்வர்வூட் ஐசிசி T20 உலகக்கிண்ணத்துடன் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, சனத் ஜயசூரிய இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

Read More

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக 250 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் அவர்களில் 5 கடற்படை சமையல்காரர்களும் உள்ளனர். மேலும், இறுதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பிற்காக 160 அதிகாரிகள் வழங்கப்பட்டுள்ளனர். அவசியமற்ற பாதுகாவலர்கள் மற்றும் அரச சம்பளம் பெறும் சேவையாளர்களின் தொகை அளவை வெகுவிரைவில் ஆலோசனை செய்து குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று முன்னதாக சொல்லியிருந்த அநுர இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுட்டிக்காட்டி பல சிங்கள சமூக ஊடகங்கள் செய்தி வெளியுட்டள்ளன. இருப்பினும், இதுகுறித்து ஜனாதிபதி அநுர அவர்கள் மற்றும் பொதுபாதுகாப்பு அமைச்சர் விஜித அவர்களும் உரிய திணைக்களங்கள் மற்றும் சட்டவல்லுனர்களுடனும் ஆலோசித்து வருவதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரச தரப்பு தெரிவிக்கின்றது.

Read More

மேஷ ராசி குழந்தைகளின் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு மேம்படும். தள்ளிப்போன சில வேலைகள் நிறைவேறும். புதிய பொருட்களின் சேர்க்கை ஏற்படும். மறைமுக திறமைகள் வெளிப்படும். மனதளவில் புதிய நம்பிக்கை உண்டாகும். திறமைகள் வெளிப்படும் நாள். ரிஷப ராசி கடன் தொடர்பான சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். கல்வியில் இருந்துவந்த தடுமாற்றம் மறையும். அரசு வழியில் சாதகமான செய்திகள் கிடைக்கும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். தனம் நிறைந்த நாள். மிதுன ராசி எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்துவதற்கான முயற்சி மேம்படும். வெளியூர் பயணங்களால் அனுபவம் கிடைக்கும். குழந்தைகளால் மதிப்பு அதிகரிக்கும். நவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து…

Read More

காலி மாவட்டத்தின் காலி தொகுதியை மையமாகக் கொண்ட ஐ.தே.க செயற்பாட்டாளர்களின் விசேட கூட்டம் நேற்று காலி, உலுவிடிகேயிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே தொடர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Read More

அமெரிக்காவில் ஹெலன் சூறாவளி புயல் கடந்த வியாழக்கிழமை பலவீனமடைந்தது. இதனை தொடர்ந்து, புளோரிடா பகுதியில் சூறாவளி கரையை கடந்தது. இதனால், பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதி மற்றும் புளோரிடா மாகாணம் முழுவதும் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தி சென்றது. சூறாவளியால் மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. வீடுகள் பல சூறாவளியால் சேதமடைந்தன. இதனால், ஜார்ஜியா மாகாணத்தில் 11 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் மற்றவர்களை பாதுகாப்பதற்காக சென்ற தீயணைப்பு வீரர் ஒருவரும் அடங்குவார். புளோரிடாவை சேர்ந்த 7 பேர், தெற்கு கரோலினாவில் 6 பேரும், வடக்கு கரோலினாவில் ஒருவரும் உயிரிழந்தனர். மொத்தத்தில் 26 பேர் உயிரிழந்து உள்ளனர். வடக்கு கரோலினாவில் 4 பேர் காயம் அடைந்தனர். இந்த பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

Read More