Author: admins

ஊழலற்ற சிறந்த ஆட்சியை உருவாக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேயாகி (Mizukoshi Hideaki தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேயாகி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்கவிற்கு தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்த ஜப்பானிய தூதுவர், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு ஜப்பான் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Read More

கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் உள்ளிட்ட ரசிகர்களுக்கு விருப்பமான ஆளுமைகள் இருந்த இந்தியன் 2 இந்தளவுக்கு மோசமாக உருவாக்கப்பட்டிருக்குமா எனும் அளவுக்குப் படம் இருந்தது. சமூகவலைதளங்களில் படம் பெரியளவில் கேலிகளுக்கு உள்ளானது. படத்தின் பலக் காட்சிகளை பகிர்ந்து அதை ரசிகர்கள் ட்ரோல் செய்யுமளவுக்கு சென்றது. அதனால் திரையரங்க வசூலில் வீழ்ச்சியை சந்தித்தது. படம் ஓடிடியில் வெளியான போது ட்ரோல்கள் பல மடங்கு அதிகமாகின. இதனால் இந்தியன் 3 படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பே இல்லை எனும் நிலைதான் உள்ளது. மேலும் இந்தியன் 2 படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதால், இந்தியன் 3 வௌியாகும் போது அவர்கள் குறைவான விலைக்குக் கேட்க வாய்ப்பிருக்கிறது என சொல்லப்படுகிறது. இதனால் இப்போது இந்தியன் 3 திரைப்படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்துவிடலாமா என்ற முயற்சிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது

Read More

பாங்காக்கிற்கு வெளியே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் 20 குழந்தைகள் மற்றும் மூன்று ஆசிரியர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தாய்லாந்து நாட்டின் வடக்கே பள்ளிப் பயணத்தை முடித்துக் கொண்டு தாய்லாந்து தலைநகருக்குத் திரும்பிக் கொண்டிருந்தத பேருந்து, ஒரு மேம்பாலத்தின் கீழ் பேருந்து எரிந்தபோது, ​​​​அடர்ந்த கரும் புகையின் பெரிய மேகங்கள் வானத்தில் குவிந்ததால், அந்த காட்சியின் வீடியோக்கள் பேருந்தில் தீப்பிடிப்பதைக் காட்டியது. பாங்காக்கிற்கு வடக்கே 100 கிமீ (61 மைல்) தொலைவில் உள்ள காவல்துறையினரிடம் ஓட்டுனர் தன்னை ஒப்படைத்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே எடுக்கப்பட்ட காட்சிகள் ஓட்டுநர் தீயை அணைக்க முயற்சிப்பதைக் காட்டியது, ஆனால் அவர் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார். முன்பக்க டயர் வெடித்ததால், பாங்காக்கிற்கு வடக்கே நெடுஞ்சாலையைப் பிரிக்கும் கான்கிரீட் தடுப்புச் சுவரில் பேருந்து மோதியதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். பேருந்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால், பலரால் வெளியே…

Read More

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் தலைமையிலான குழுவினர் ஒக்டோபர் 4-ஆம் திகதி வரை நாட்டில் தங்க உள்ளனர். அவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் புதிய அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்களை சந்திக்க உள்ளனர். இந்த விஜயத்தின் போது, இலங்கையின் புதிய பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இலங்கை பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத், நிதியத்தின் வேலைத்திட்டம் தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் மாத்திரமே நிதியத்தின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Read More

மேஷ ராசி உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். கால்நடை வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். தாமதம் நிறைந்த நாள். ரிஷப ராசி பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். தனவரவு தாராளமாக இருக்கும். வாகனங்களால் முன்னேற்றம் ஏற்படும். பெரியோர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நிர்வாக துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த தயக்கங்கள் குறையும். லாபம் நிறைந்த நாள். மிதுன ராசி வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பார்ப்புகளில் இருந்துவந்த தடைகள் விலகும். மேல்நிலைக் கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாகன பிரச்சனைகள் குறையும். வாசனை திரவியங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். முயற்சிக்கு உண்டான…

Read More

சமீபத்தில் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஜனாதிபதி அறிவித்ததாக புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் பிரச்சினைக்காக பெற்றோர்கள் தெரிவித்தனர். நேற்றய தினம் பிற்பகல் ஜனாதிபதியை சந்தித்த போதே இந்த தீர்மானத்தை தமக்கு அறிவித்ததாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் பிரச்சினைக்கு தீர்வைக் கோரி நேற்று பத்தரமுல்லை மற்றும் கொழும்பில் பெற்றோர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது .

Read More

பிரபல நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டமையால் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய வயிறு தொடர்பான பிரச்சனை காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்துக்கு வைத்தியசாலையில் வயிறு தொடர்பான பிரச்சனை காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்துக்கு வைத்தியசாலையில் சில பரிசோதனைகள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More

கொழும்பு வாழைத்தோட்டம் பிரதேசத்தில் உள்ள வாகனங்கள் பழுதுபார்க்கும் இடத்தில் நடைபெற்ற முகநூல் ஊடாக ஒழுக்கமைக்கப்பட்ட களியாட்டம் நிகழ்வில் கலந்து கொண்ட 18 பாடசாலை மாணவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர். ராகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொட்டாஞ்சேனை, புளுமண்டல், தெமட்டகொடை, வெல்லம்பிட்டி மற்றும் கொலன்னாவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 15 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 16 மாணவர்களும் 02 மாணவிகளும் காணப்படுவதாக பொலிஸார் மேலும் , தெரிவித்தனர்.

Read More

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளரான சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது. அதற்கமைய, சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்த கிரிஸ் சில்வர்வூட் ஐசிசி T20 உலகக்கிண்ணத்துடன் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, சனத் ஜயசூரிய இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

Read More

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக 250 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் அவர்களில் 5 கடற்படை சமையல்காரர்களும் உள்ளனர். மேலும், இறுதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பிற்காக 160 அதிகாரிகள் வழங்கப்பட்டுள்ளனர். அவசியமற்ற பாதுகாவலர்கள் மற்றும் அரச சம்பளம் பெறும் சேவையாளர்களின் தொகை அளவை வெகுவிரைவில் ஆலோசனை செய்து குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று முன்னதாக சொல்லியிருந்த அநுர இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுட்டிக்காட்டி பல சிங்கள சமூக ஊடகங்கள் செய்தி வெளியுட்டள்ளன. இருப்பினும், இதுகுறித்து ஜனாதிபதி அநுர அவர்கள் மற்றும் பொதுபாதுகாப்பு அமைச்சர் விஜித அவர்களும் உரிய திணைக்களங்கள் மற்றும் சட்டவல்லுனர்களுடனும் ஆலோசித்து வருவதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரச தரப்பு தெரிவிக்கின்றது.

Read More