Author: admins

சில அமைச்சர்கள் அரச வாகனங்கள் முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிரடி பணிப்புரை விடுத்துள்ளார். இந்த நிலையில் , ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான பல வாகனங்கள் காலி நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதை காணலாம் . மேலும் , ஜனாதிபதி செயலகத்தினூடாக பல்வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட 97 அரச வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக நேற்று மேற்கொண்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே ஆட்சில் இருந்து விலகிய பின்னர் புதிய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்த அடுத்த சில நாட்களுக்குள் குறித்த அந்த வாகனங்களை பயன்படுத்தியவர்கள் வாகனங்களை நிறுத்தியுள்ளதாக இன்று அந்த இடத்திற்கு விஜயம் செய்த தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

Read More

நாட்டின் புதிய ஜனாதிபதியான அநுர குமார திசாநாயக்க நேற்றைய நாளன்று கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் சென்று ஆசி பெற்றார். அவரது உத்தியோகபூர்வ வீடிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, பேராயரைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன் சில கருத்துக்கள் நிரைந்த பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளது இங்கு கருத்து தெரிவித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இலங்கையின் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தினால் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அநு ரகுமார திசாநாயக்கவுக்கு எனது வாழ்த்துக்களை கூறிக்கொள்வதோடு , இந்த அற்புதமான சந்தர்ப்பத்தில் இலங்கையில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்தும் பாரிய பொறுப்பை நாட்டு மக்கள் உங்களிடம் ஒப்படைத்துள்ளனர். இது மிக முக்கிய பொறுப்பாகவும் , கடமையாகவும் அதற்காக அவருக்கு நாம் முழு ஆதரவையும் ஆசிகளையும் வழங்குவோம் என்று உறுதியளிக்கிறோம். குறிப்பாக இந்நாட்டின் வறிய மக்களைப் பற்றி சிந்தித்து உங்கள் பணியை தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் மற்றும் புதிய ஜனாதிபதியான அனுரகுமார திசாநாயக்க உண்மையை வெளியே…

Read More