Author: admins

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுர குமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார். அவர் தனது X கணக்கில் இந்த செய்தியை பதிவு செய்துள்ளார், அதில் கூறப்பட்டுள்ளதாவது. “இலங்கை மக்கள் உங்களை சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தலில் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.” “அவர்கள் அதைப் பற்றி பெருமைப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.” “இந்து-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்புக்காக உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்பார்க்கிறேன்” என்று அமெரிக்க ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.

Read More

புதிய எக்ஸ்இசி வகை கொரோனா, என்ற வைரஸ் குறித்த 27 நாடுகளில் பரவி வருகிறது என்றும், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவுகிறது என்றும் கூறப்படுகிறது. இந்த கொரோனா வகை, முன்பு பரவிய ஒமிக்ரான் திரிபுகள் KS.1.1 மற்றும் KP.3.3 ஆகியவற்றின் கலவையாகும். இந்த புதிய திரிபு விரைவில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய கொரோனா திரிபாக மாறும் என்ற எச்சரிக்கையை விஞ்ஞானிகள் விடுத்துள்ளனர். இந்த எக்ஸ்இசி வகை முதன்முதலில் ஜெர்மனியில் கடந்த ஜூன் மாதம் கண்டறியப்பட்டது. அதன் பின்னர், இங்கிலாந்து, அமெரிக்கா, டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளில் பரவத் தொடங்கியது. நிபுணர்கள் கூறுவதின்படி, இந்த ஒமிக்ரான் திரிபு வரும் குளிர்காலத்தில் வேகமாக பரவலாம், ஆனால் தடுப்பூசிகள் மூலம் இதை கட்டுப்படுத்த முடியும். இதுவரை 27 நாடுகளில், உள்பட போலந்து, நார்வே, லக்சம்பர்க், உக்ரைன், போர்ச்சுக்கல், சீனா ஆகியவற்றில் 500 பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் எக்ஸ்இசி வகை புதிய தொற்று உறுதி…

Read More

நேற்றைய தினம் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் விவரம் வருமாறு, 01-ஹனீஸ் யூசுப் – மேல் மாகாண ஆளுநர்02-சரத் பண்டார சமரசிங்க அபயகோன்- மத்திய மாகாண ஆளுநர்03-பந்துல ஹரிஸ்சந்திர -தென் மாகாண ஆளுநர்04-திஸ்ஸ குமாரசிரி வர்ணசூரிய – வடமேல் மாகாண ஆளுநர்05-வசந்த குமார விமலசிறி – வட மத்திய மாகாண ஆளுநர்06-நாகலிங்கம் சேதநாயகன் – வட மாகாண ஆளுநர்07-ஜயந்த லால் ரத்னசேகர – கிழக்கு மாகாண ஆளுநர்08-சம்பா ஜானகி ராஜரத்ன -சபரகமுவ மாகாண ஆளுநர்09- கபில ஜயசேகர -ஊவா மாகாண ஆளுநர்

Read More

சில அமைச்சர்கள் அரச வாகனங்கள் முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிரடி பணிப்புரை விடுத்துள்ளார். இந்த நிலையில் , ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான பல வாகனங்கள் காலி நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதை காணலாம் . மேலும் , ஜனாதிபதி செயலகத்தினூடாக பல்வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட 97 அரச வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக நேற்று மேற்கொண்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே ஆட்சில் இருந்து விலகிய பின்னர் புதிய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்த அடுத்த சில நாட்களுக்குள் குறித்த அந்த வாகனங்களை பயன்படுத்தியவர்கள் வாகனங்களை நிறுத்தியுள்ளதாக இன்று அந்த இடத்திற்கு விஜயம் செய்த தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

Read More

நாட்டின் புதிய ஜனாதிபதியான அநுர குமார திசாநாயக்க நேற்றைய நாளன்று கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் சென்று ஆசி பெற்றார். அவரது உத்தியோகபூர்வ வீடிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, பேராயரைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன் சில கருத்துக்கள் நிரைந்த பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளது இங்கு கருத்து தெரிவித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இலங்கையின் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தினால் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அநு ரகுமார திசாநாயக்கவுக்கு எனது வாழ்த்துக்களை கூறிக்கொள்வதோடு , இந்த அற்புதமான சந்தர்ப்பத்தில் இலங்கையில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்தும் பாரிய பொறுப்பை நாட்டு மக்கள் உங்களிடம் ஒப்படைத்துள்ளனர். இது மிக முக்கிய பொறுப்பாகவும் , கடமையாகவும் அதற்காக அவருக்கு நாம் முழு ஆதரவையும் ஆசிகளையும் வழங்குவோம் என்று உறுதியளிக்கிறோம். குறிப்பாக இந்நாட்டின் வறிய மக்களைப் பற்றி சிந்தித்து உங்கள் பணியை தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் மற்றும் புதிய ஜனாதிபதியான அனுரகுமார திசாநாயக்க உண்மையை வெளியே…

Read More