Thursday, January 2

ஜெய் பீம்’ இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

கடந்த சில வாரங்களாக படத்தின் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் முதல் பாடலான `மனசிலாயோ’ பாடலின் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலை மறைந்த பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் பாடலை பாடியுள்ளார்.

மஞ்சுமா வாரியர் படத்தில் நடித்த கதாப்பாத்திரத்தை பற்றி சமீபத்தில் நடந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் ” நான் இத்திரைப்படத்தில் தாரா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். தாரா ஒரு வ்லாக்கர் ஆவார். ரஜினிகாந்திற்கு மனைவியாக நடித்துள்ளேன். ரஜினி சாருடன் இணைந்து நடித்ததில் பெரும் மகிழ்ச்சி. படத்தில் என்னுடைய கதாப்பாத்திரத்திற்கு முக்கியமான பங்கு இருக்கிறது. மனசிலாயோ பாடலில் ஆடியது மிகவும் புது அனுபவமாக இருந்தது. அத்தனை நடன கலைஞருடன் இணைந்து ஒரே ஸ்டெப் ஆடுவது மகிழ்ச்சியாக இருந்தது.” என கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version