Friday, November 22

பிரிக்ஸ் அதன் வர்த்தகத்தில் அமெரிக்க டொலரை ஒருங்கிணைக்காமல் ஒரு புதிய கட்டண முறையை உருவாக்கும் நோக்கில் செயல்படுகிறது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உறுதிப்படுத்தினார்.

புதிய கட்டண முறையானது எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளைத் தீர்ப்பதற்கு மட்டும் பயன்படுத்தப்படாது, இது முழுமையான நிதி அமைப்பாக செயல்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

புதிய பிரிக்ஸ் கட்டண முறையானது உலகளாவிய நிதித்துறையில் ஒரு முன்னுதாரண மாற்றத்திற்கு வழிவகுக்கும். அதேநேரம், டொலர் வர்த்தகம் நிறுத்தப்படுமானால் அது அமெரிக்காவில் பல துறைகளில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

பிரிக்ஸ் முன்னணி வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் குழுவாகும். முதலில் பிரிக்ஸானது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை கொண்டிருந்தது.

2024 இல், உறுப்பு நாடுகள் 10 நாடுகளாக விரிவடைந்தன. எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய ஐந்து நாடுகள் புதிதாக இணைந்தவை ஆகும்.

Share.
Leave A Reply

Exit mobile version