Friday, January 3

பின்னணி பாடகி,ஆர்ஜே, நடிகை என்று பல திறன்களை கொண்டவர் சுஜித்ரா . யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்துவரும் அவர், பல சமயங்களில் சர்ச்சைகளை கிளப்பிவருகின்றன.

அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் சுசித்ரா மீது வழக்கும் தொடர்ந்திருக்கிறார்.
மேலும் நடிகை ரீமா கல்லிங்கலும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க சமீபத்தில் ரெட் டாக்கீஸ் என்ற யூட்யூப் சேனலுக்கு சுசித்ரா பேட்டி அளித்தார்.

அவர் அளித்த பேட்டியில், “எனக்கு அடுத்த ஜென்மத்திலாவது சூர்யா புருஷனாக வர வேண்டும் என்று நினைத்தேன்.

நானும் அவரும் ஆயுத எழுத்து படத்தில் இணைந்து நடித்தோம். அந்த சமயத்தில் சூர்யாவை நான் ரசித்துக்கொண்டே இருப்பேன்.

எனது கண்கள் அவரை ரசித்துக்கொண்டே இருந்தன, மணிரத்னம் அதனை கண்டுபிடித்தாலும் சூர்யாவை என்னால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. எனக்கு அவரது கண்கள் அவ்வளவு பிடிக்கும். அவ்வளவு அழகு அவரது கண்கள். என்னால் என்னை கன்ட்ரோல் செய்ய முடியாததால் அந்த சீன் எடுக்கும்போது பல டேக்குகள் சென்றன. ஒருகட்டத்தில் மணிரத்னம், என்னிடம் ‘நீ குனிந்துகொள். நான் உன்னுடைய தலையை வைத்து எடுத்துக்கொள்கிறேன். டப்பிங்கில் பார்த்துக்கொள்ளலாம் என்றார்.

ஒருகட்டத்தில் சூர்யா மீது இருந்த அன்பால் அவரது வீட்டுக்கு சென்று மாப்பிள்ளை கேட்கலாமா என்றுகூட யோசித்தேன். அவர்கள் பெரிய குடும்பம். ஆனால் நான் அப்படி சென்றால் என்னை சிவகுமார் கேவலமாக திட்டி யார் வீட்டுக்கு வந்து என்ன கேட்கிறாய் என்று என்னை வெளியே அனுப்பியிருப்பார் என்று நன்றாகவே தெரியும். என்று மிக மனவேதனையுடன் கூறியுள்ளார்

Share.
Leave A Reply

Exit mobile version