Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- போலந்தில் இயங்கும் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான என்டர் ஏர் (Enter Air), இலங்கைக்கும் போலாந்துக்கும் இடையிலான புதிய விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
- பால்டிமோர் பால கப்பல் விபத்து
- ஒருவர் நிர்வாணமாக குளிப்பது கொடும் பாவமா? – சாஸ்திரங்கள் சொல்லும் உண்மைகள்..
- மற்றுமொரு விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்!
- பிரான்ஸ் தூதுவருடன் பிரதமர் ஹரினி அமரசூரிய சந்திப்பு..
- ரஜினியின் உடல் தற்போது சரி இல்லாத காரணத்தினால் அவர் மன நிம்மதிக்காக ஐஸ்வர்யா எடுத்த முடிவு…
- 1000 கோடியை தட்டுவாரா சூர்யா.?
- துரித உணவு உற்பத்தி நிறுனமான மெக்டொனால்டுக்கு சென்று, பிரெஞ்சு பொரியல்களை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறிய டொனால்ட்…!
Author: admins
கப்பலின் உரிமையாளர் கிரேஸ் ஓஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட மேலாளர் சினெர்ஜி மரைன் குழுமத்தின் மீது நீதித்துறை வழக்குத் தொடுத்த ஒரு மாதத்திற்குப் பின்னர் இந்த தீர்வு வந்துள்ளது. நீருக்கடியில் குப்பைகளை அகற்றவும், நகரின் துறைமுகத்தை மீண்டும் திறக்கவும் அரசாங்கம் செலவழித்த நிதியை மீட்டெடுக்க கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பால்டிமோர் நகரில் இருந்து கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு புறப்பட்ட டாலி என்ற கப்பலே விபத்துக்குள்ளானது.
மனித வாழ்க்கையின் ஒவ்வொரு செயலுக்கும் சாஸ்திரங்கள் விளக்கங்கள் வைத்துள்ளது. சாஸ்திரங்களின்படி, மனிதர்களுடைய அறிவுக்கு அப்பாற்பட்ட ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அவை மனித குலத்தின் நன்மைக்காக சொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. வீடு கட்டுவதற்கான வாஸ்து தொடங்கி வீடு குடியேறும் முன்பு செய்ய வேண்டிய பூஜைகள் வரை சாஸ்திரங்களில் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி அர்த்தங்களும், காரணங்களும் உள்ளன. அந்த வகையில் குளிக்கும்போது ஆடைகள் இல்லாமல் குளிப்பது சரியா என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். பழங்காலங்களில் இன்றைய காலகட்டத்தை போல ஒவ்வொரு வீடுகளிலும் குளியலறை இருக்காது. அரண்மனைகளில் தான் குளிப்பதற்கு என்று தனி இடம் அமைக்கப்பட்டிருக்கும். பொதுமக்கள் பெரும்பாலும் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளை தான் குளிப்பதற்கு பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். அங்கு ஆண்கள் கோமணம் கட்டியும், பெண்கள் இடை கட்டியும் குளிப்பார்கள். அந்த காலத்தில் குளிக்கும் இடத்தில் நீராடி கொண்டிருக்கும் போதே பூச்சிகள் தீண்டிவிடக் கூடாது என முன்னெச்சரிக்கையாக ஆடைகளை அணிந்தபடி குளிக்க சொல்வார்கள். ஏனென்றால் நிர்வாணமாக…
இந்தியாவின் மும்பையில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்து கொண்டிருந்த இந்திய விஸ்டாரா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, விமானம் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் 3.15 மணிக்கு கட்டுநாயக்கவுக்கு வரவிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தரையிறங்கும் முன் தொலைபேசி ஊடாக தகவல் வந்ததாக சிறிலங்கன் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த விமானத்தில் ஒரு சிறு குழந்தை உட்பட 108 பயணிகளும் 8 பணியாளர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த விமானம் 2.55 மணியளவில் தரையிறக்கப்பட்டதாகவும், பின்னர் விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மாரி – நொயில் டூரிஸுக்கும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பு பிரதமர் அலவலகத்தில் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. சந்திப்பின்போது இலங்கையுடனான பிரான்சின் நீண்டகால நட்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கைக்கு தொடர் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இந்த கலந்துரையாடலில் இலங்கை மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவின் 75 வருட ஆண்டு நிறைவு குறித்தும் விசேடமாக கருத்து வெளியிடப்பட்டதுடன் இரு நாடுகளுக்குமிடையிலான பல்வேறு துறைகள் சார்ந்த ஒத்துழைப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
நடிகர் தனுஷ் மற்றும் அவர் மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவும் அவர்களது திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து வாழ்கின்றனர் ..ஆனால் இவர்கள் இருவரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை, இதனால், இவர்கள் இருவருமே மீண்டும் இணைய உள்ளார்கள் என்று பேசப்பட்டது. இந்நிலையில், பிரபல பத்திரிகையாளரான சுபைர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து பேசியுள்ளார். அதில், “ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரையும் சேர்த்து வைக்க ரஜினி மற்றும் இரு தரப்பினரின் குடும்பங்களும் பல முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால், அப்போது செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. சூழல் இப்படி இருக்க இவர்கள் இருவரின் மனதிலும் தற்போது மாற்றம் ஏற்பட்டு இருவரும் இணையும் முடிவில் இருக்கிறார்கள்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா நவம்பர் 14 திரைக்கு வருகிறது. கிட்டத்தட்ட இரண்டு வருட காத்திருப்பின் பலனாக ரசிகர்கள் அதை திருவிழா போல் கொண்டாட காத்திருக்கின்றனர். ஏற்கனவே பாடல்கள் ட்ரெய்லர் வெளியாகி இருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் வேட்டையனால் தள்ளிப்போனது. அதை அடுத்து தடைகளைத் தாண்டி ரிலீஸ் ஆக இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பே படத்தின் பிரமோஷன் தொடங்கிவிட்டது. சமீபத்தில் இயக்குனரோடு இணைந்து சூர்யா கொடுத்த பேட்டியில் கூட பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது. அதன்படி மதன் கார்க்கி தன்னுடைய சோசியல் மீடியா தளத்தில் கங்குவா படம் பற்றி குறிப்பிட்டுள்ளார். இப்படத்தின் வசனகர்த்தாவான இவர் தற்போது முழு படத்தையும் பார்த்துள்ளார். ஏற்கனவே டப்பிங் போது காட்சிகளை பார்த்தேன். ஆனால் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும்…
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், முக்கிய தேர்தல் மாநிலங்களில் கடுமையான பிரச்சார நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். குடியரசுக் கட்சியின் வேட்பாளர் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை பென்சில்வேனியா மாநிலத்தில் வாக்காளர்களை கவரும் வகையில் ஒரு புதிய யுக்தியை கையாண்டார். அதே நேரத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க துணை ஜனாதிபதி ஹாரிஸ் ஜோர்ஜியாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை பென்சில்வேனியாவில் அமைந்துள்ள துரித உணவு உற்பத்தி நிறுனமான மெக்டொனால்டுக்கு சென்று, பிரெஞ்சு பொரியல்களை வாடிக்கையாளர்களுக்கு பரிமாற்றினார்.
தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான டெல்லி-லண்டன் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அந்த விமானம் பிராங்க்பர்ட் நகருக்குத் திருப்பி விடப்பட்டது. புதுடெல்லியில் இருந்த லண்டன் சென்ற விஸ்தாரா நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அந்த விமானம் பிராங்க்பர்ட் நகருக்கு திருப்பி விடப்பட்டது. இந்தியாவில் இருந்து சென்ற 40 விமானங்களுக்கு கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. எனினும் சோதனைக்குப் பின்னர் அவை உண்மையல்ல புரளி என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் புதுடெல்லியில் இருந்து லண்டன் சென்ற விஸ்தாரா விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்துக்கு விமான நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர்,”18ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தின் வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து இது குறித்து தொடர்புடைய அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானி விமானத்தை பிராங்க்பர்ட் நகரில் இறக்குவது என்று முடிவு…
வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லாஹியா (Beit Lahia) நகரில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதல்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட குறைந்தது 73 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர். சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட இந்த குண்டுத் தாக்குதல்களில் பலர் காயமடைந்துள்ளதுடன், மேலும் பலர் தாக்குதல்களுக்கு இலக்கான கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் பல மாடி கட்டிடத்தை குறிவைத்து, அருகிலுள்ள பல வீடுகளை சேதப்படுத்தியதாக காசா பகுதியில் உள்ள வைத்தியர்கள் தெரிவித்தனர். இப்பகுதியில் தகவல் தொடர்பு மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், பெய்ட் லாஹியாவில் மீட்பு முயற்சிகள் தற்போது தடைபட்டுள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியா பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் நேற்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சிவான் மற்றும் சரண் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 20 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் 12 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.