Thursday, January 2

கொழும்பு வாழைத்தோட்டம் பிரதேசத்தில் உள்ள வாகனங்கள் பழுதுபார்க்கும் இடத்தில் நடைபெற்ற முகநூல் ஊடாக ஒழுக்கமைக்கப்பட்ட களியாட்டம் நிகழ்வில் கலந்து கொண்ட 18 பாடசாலை மாணவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.

ராகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொட்டாஞ்சேனை, புளுமண்டல், தெமட்டகொடை, வெல்லம்பிட்டி மற்றும் கொலன்னாவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 15 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 16 மாணவர்களும் 02 மாணவிகளும் காணப்படுவதாக பொலிஸார் மேலும் , தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version