Friday, January 3

விஜய்யின் கடைசிப் படம் ‘விஜய்69’ பற்றி பேசும்போதே சென்டிமென்ட்டாக ரசிகர்கள் நினைக்கும்போது, இப்படம் பூஜை தொடங்கும் முன்பே இப்படத்திற்கு புதிய சர்ச்சை எழுந்துள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘கேவிஎன் புரடக்சன்ஸ்’ தயாரிப்பில் விஜய்யின் கடைசிப் படமான விஜய்69 உருவாகவுள்ளது. அவரது அரசியல் வருகைக்கும் வரும் 2026 தேர்தலுக்கு அடித்தளமான அரசியல் கதைக்களத்துடன் இப்படம் உருவாகவுள்ளதாகவும், விஜய்யை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் சமூக அக்கறை கொண்ட படமாக இப்படத்தை வினோத் செதுக்கி வருவதாக தகவல் வெளியாகிறது.

இப்படத்தின் ஸ்டார் காஸ்டிங் பட்டியலை படக்குழு வெளியிட்டு வரும் நிலையில் அனிமல் பாபி தியோல், பூஜா ஹெக்டே உள்ளிட்டோரை அறிமுகம் செய்துள்ளது. இப்படம் பான் இந்தியா படமாக உருவாகும் நியலியில், இனி நட்சத்திரங்கள் ஒவ்வொருவராக அறிமுகம் செய்யப்படவுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version