Friday, January 3

ஈரான், இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதல் மத்திய கிழக்கில் பெரும் போராக மாறி, எண்ணெய், எரிபொருள் விநியோகத்தில் இடையூறு செய்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

Brent, WTI இரண்டு எண்ணெய் ரகங்களின் விலையும் ஐந்து சதவீதம் வரை உயர்ந்தது.

கிட்டத்தட்ட ஓராண்டில் காணாத விலையேற்றம் அதுவாகும்.

மத்திய கிழக்கில் போர் வெடித்தால், உலகத்துக்கு வரும்  எண்ணெயில் மூன்றில் ஒரு பகுதி பாதிக்கப்படலாம்.

கடந்த ஆண்டு நிலவரப்படி, எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஈரான் ஏழாவது இடத்தில் உள்ளது. 

தினமும் மூன்று முதல் நான்கு மில்லியன் பீப்பாய் எண்ணெயை உற்பத்தி செய்யும் நாடு ஈரான் ஆகும்.

அது மட்டுமல்லாமல், உலகின் அதி முக்கியமான எண்ணெய் விநியோகச் சந்திப்பான Hormuz நீரிணை ஈரானுக்குப் பக்கத்தில் உள்ளது. 

இஸ்ரேல் மீது ஈரான் திடீரென 180 ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலின் அயல்நாடான ஜோர்தானின் வான்பரப்பில் அவ் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டு, தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version