Friday, January 3

தமிழ் சினிமாவில் டிஷ்யூம் தொடங்கி கோ, சிவா மனசுல சக்தி, ஜிப்ஸி என பன்முக கதாப்பாத்திரங்கள் கொண்ட பல படங்களில் நடித்து வருகிறார் ஜீவா.

தற்போது ஜீவா – ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷன் தயாரிக்கும் இந்த படத்தை பாடலாசிரியர் பா.விஜய் இயக்குகிறார்.

இதில் ராஷி கண்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படம் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அதை பார்க்கும்போது அது ஒரு பீரியட் பேண்டசி டிராமா கதைகளமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஹாலிவுட்டில் வெளியான இண்டியானா ஜோன்ஸ் போன்ற பீரியட் சாகச படமாக ‘அகத்தியா’ உருவாகி வருவதாக தெரிகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version