Thursday, January 2

மேஷ ராசி

சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உடல் நிலையில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். விலகிச் சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் பக்குவமாக நடந்து கொள்ளவும். தேவைக்கேற்ப வரவுகள் கிடைக்கும். பெருமை நிறைந்த நாள்.

ரிஷப ராசி

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். கலை சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த இடையூறுகள் விலகும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். ஆடம்பரமான பேச்சுக்களை நம்பி புதிய முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. இன்பம் நிறைந்த நாள்.

மிதுன ராசி

மனதில் சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். கல்விப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். விவசாயப் பணிகளில் மாற்றமான சூழல் அமையும். உற்சாகம் நிறைந்த நாள்.

 கடக ராசி

சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். அரசு பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் மறையும். எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். நலம் நிறைந்த நாள்.

சிம்ம ராசி

எதிர்பார்த்த சில பணிகள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். இறை வழிபாடு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வாழ்க்கை துணைவருடன் சிறுதூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். தனம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். அமைதி வேண்டிய நாள்.

 கன்னி ராசி

செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். வெளியூர் வர்த்தகத்தில் விவேகம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். தந்தை வழி உறவுகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உயர் அதிகாரிகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.

துலாம் ராசி

கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். துணைவர் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பயணங்கள் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பாசம் நிறைந்த நாள்.

விருச்சிக ராசி

உத்தியோகப் பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். வெளியூர் பயணங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். கால்நடை தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். சுபம் நிறைந்த நாள்.

தனுசு ராசி

மனதில் புதுமையான சிந்தனைகள் மேம்படும். திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் நட்பு வட்டாரம் விரிவடையும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உயர் கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள்.

மகர ராசி

தாயார்வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். இழுபறியான சில பணிகள் நிறைவு பெறும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். வீடு மாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சாந்தம் வேண்டிய நாள்.

கும்ப ராசி

மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். நிர்வாகப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். விற்பனை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். குறுகிய தூர பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். விவேகம் வேண்டிய நாள்.

மீன ராசி

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். நிதி மேலாண்மை சார்ந்த செயல்களில் தெளிவு பிறக்கும். உயர் கல்வி ஆலோசனைகள் கிடைக்கும். பழைய சிக்கல்கள் குறையும். பொன், பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். வாக்கு சாதுரியம் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் ஆதாயகரமான சூழல் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.

Share.
Leave A Reply

Exit mobile version