Thursday, January 2

வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லாஹியா (Beit Lahia) நகரில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதல்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட குறைந்தது 73 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட இந்த குண்டுத் தாக்குதல்களில் பலர் காயமடைந்துள்ளதுடன், மேலும் பலர் தாக்குதல்களுக்கு இலக்கான கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் பல மாடி கட்டிடத்தை குறிவைத்து, அருகிலுள்ள பல வீடுகளை சேதப்படுத்தியதாக காசா பகுதியில் உள்ள வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இப்பகுதியில் தகவல் தொடர்பு மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், பெய்ட் லாஹியாவில் மீட்பு முயற்சிகள் தற்போது தடைபட்டுள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version