Author: admins

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ,  மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More

மேஷம்எடுத்த காரியத்தில் ஏதாவது இடையூறால் அவதிப்படுவீர்கள். அஷ்டம சந்திரன் உங்களுக்கு கஷ்டத்தைக் கொடுப்பதில் ஆச்சரியமில்லை. புதிய முயற்சிகளைத் தள்ளிப் போட்டால் நஷ்டம் அடைய மாட்டீர்கள். ஒப்பந்தங்கள் செய்யும்போது இரண்டு மடங்கு எச்சரிக்கை தேவை. வண்டி வாகனங்களில் போகும்போது வேடிக்கை பார்க்காதீர்கள். ரிஷபம்வியாபாரத்திற்கு உதவியான வெளிநாட்டு செய்தியால் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிற்சாலைகளில் உற்பத்தியை பெருக்குவீர்கள். தொழிலில் உருவாகும் போட்டிகளைச் சுலபமாக முறியடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டல் பரவசமடைவீர்கள். சிறு வியாபாரிகள் பல வகையில் அனுகூலம் பெறுவீர்கள். மிதுனம்மிதுனம்விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆடல் பாடல் என்று இன்பமாகப் பொழுதைக் கழிப்பீர்கள். தொழிலில் சிறு தடங்கல் ஏற்பட்டாலும் புத்திசாலித்தனமாக அடுத்த கட்டத்திற்கு நகர்வீர்கள். பணியாளர்களை ஊக்கத்துடன் வேலை வாங்குவீர்கள். பணவரவு தாராளமாக இருப்பதால் நீண்ட கால கடன்களை அடைப்பீர்கள். வெளிவட்டாரச் செல்வாக்கு உயரும். கடகம்கடகம்நெருஞ்சி முள்ளைப் போல ஒரு கவலை நெஞ்சில் உறுத்தும். மனைவி மக்களின் ஆதரவால் மன நிம்மதி பெறுவீர்கள். தேவைக்காக அதிக விலை…

Read More

தாமரை கோபுரத்தின் தளத்தில் இருந்து விழுந்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

சமூக வலைத்தளங்களில் குழந்தைகளின் புகைப்படங்கள், காணொளிகளை வெளியிடுவதினை தவிர்க்குமாறு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு வெளியிடப்படும் புகைப்படங்கள், காணொள் மூலம் குழந்தைகளின் ஆளுமை மற்றும் அடையாளம் மற்றும் குழந்தையின் குடும்ப பின்னணி என்பன அவர்களின் பாதுகாப்பிற்கு பிரச்சினையாக மாறும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தைகளின் பாதுகாப்புக்கு தொடர்பில் அளைத்து மக்களும் பொறுப்புடன் செயற்படுமாறு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு சமூக வலைத்தளங்களில் குழந்தைகளில் புகைப்படங்கள், காணொளிகளை வெளியிடுவதன் மூலம் இணையம் மூலம் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்குள்ளாகும் போக்கு அதிகரித்துள்ளதாகவும் ஆணையம் எச்சரித்துள்ளது. எனவே குழந்தைகளின் பாதுகாப்புக்கு தொடர்பில் பெற்றோர் விளிப்புடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை,க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை பேஸ்புக் பக்கத்தில் வெளியிடும் போது, அவதானமாக இருக்குமாறு குருநாகல் பிரிவு கல்விப் பணிப்பாளர் விபுலி விதானபத்திரன பெற்றோருக்கு அறிவித்திருந்தார். பெறுபேறு தாளில் உள்ள பிள்ளைகளின் தேசிய அடையாள அட்டை…

Read More

ஈரான், இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதல் மத்திய கிழக்கில் பெரும் போராக மாறி, எண்ணெய், எரிபொருள் விநியோகத்தில் இடையூறு செய்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. Brent, WTI இரண்டு எண்ணெய் ரகங்களின் விலையும் ஐந்து சதவீதம் வரை உயர்ந்தது. கிட்டத்தட்ட ஓராண்டில் காணாத விலையேற்றம் அதுவாகும். மத்திய கிழக்கில் போர் வெடித்தால், உலகத்துக்கு வரும் எண்ணெயில் மூன்றில் ஒரு பகுதி பாதிக்கப்படலாம். கடந்த ஆண்டு நிலவரப்படி, எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஈரான் ஏழாவது இடத்தில் உள்ளது. தினமும் மூன்று முதல் நான்கு மில்லியன் பீப்பாய் எண்ணெயை உற்பத்தி செய்யும் நாடு ஈரான் ஆகும்.

Read More

பிக்பாஸ் 8 நேற்று ஆரம்பித்த நிலையில் 24 மணி நேரத்திற்குள் முதல் எலிமினேஷன் என்பது அதிர்ச்சியாக தான் இருக்கிறது. ஆனால் நிகழ்ச்சியை ஆரம்பத்திலேயே சுவாரஸ்யமாக கொண்டு செல்ல வேண்டும் என்ற விஜய் டிவியின் பிளான் தான் இது. இதன் மூலம் டிஆர்பியை எகிற வைக்க புது யுக்தியை அவர்கள் கையாண்டுள்ளனர். ஆனால் இதுவே அவர்களுக்கு விமர்சனமாகவும் மாறி இருக்கிறது. அதன்படி தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோவில் முதல் எலிமினேஷன் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்குள் ஒருவர் வெளியேற வேண்டும் என்ற பிக்பாஸின் கட்டளை போட்டியாளர்களை அதிர்ச்சியாக்கி இருக்கிறது. அதற்குள் எப்படி ஒருவர் வீட்டிற்கு தேவையில்லாதவர் என கணிக்க முடியும் என அவர்கள் குழம்பி போய் இருக்கின்றனர். பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சிஆனாலும் தற்போது நாமினேஷன் தொடங்கி விட்டது. அந்த வகையில் விஜய் சேதுபதியின் ரீல் மகளான சாச்சனா வீட்டில் இருந்து வெளியேறி விட்டதாக தற்போது நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றது.…

Read More

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு மார்க் ஸக்கர்பெர்க் முன்னேறினார். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் அறிக்கையின்படி, மெட்டா நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் உலகின் இரண்டாவது பணக்காரராக உயர்ந்தார். 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மெட்டாவின் பங்குகள் எதிர்பார்த்ததைவிட 23 சதவிகிதம் உயர்ந்துள்ளன. அவரது நிகர மதிப்பு 206.2 டாலராக உயர்ந்துள்ளது. இதன்மூலம், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸைவிட 1.1 பில்லியன் டாலர் அதிகம் பெற்று, அவரை பின்னுக்குத் தள்ளி, உலகின் இரண்டாவது பணக்காரராக மார்க் ஸக்கர்பெர்க் வியாழக்கிழமையில் முன்னேறினார். இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து மட்டும் மெட்டாவின் பங்குகள் 70 சதவிகிதம் வரையில் உயர்ந்துள்ளன

Read More

ஒரு முட்டையின் விலை 36 முதல் 37 ரூபாய் வரை பராமரிக்கப்படாவிட்டால், அத்தொழில் துறை நலிவடையும் அபாயம் உள்ளதாக விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அந்த அமைச்சின் செயலாளர் எம்.பி.நிஷாந்த விக்கிரமசிங்க இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இதனைக் குறிப்பிட்டுள்ளார். கோழி தீவன விலையை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த செலவுகள் குறைக்கப்பட்டவுடன் முட்டை ஒன்றை 29 முதல் 30 ரூபாய் வரையிலான விலையில் சந்தைக்கு விநியோகிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “எப்படியும் ஒரு முட்டை உற்பத்தி செய்ய சுமார் 32 முதல் 33 ரூபாய் வரை செலவாகும்.

Read More

புறக்கோட்டை வாழைத்தோட்டம் பிரதேசத்தில் 23 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இக்கொலைச் சம்பவம் நேற்று (04) பிற்பகல் வாழைத்தோட்டம், பீர்சைபு பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞரை கும்பல் ஒன்று துரத்திச் சென்று தாக்கும் காட்சி அருகில் இருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

Read More

புதிய ஜனாதிபதியாக நியமனம் பெற்றதன் பின்னர் நாட்டின் பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் சம்பிரதாயபூர்வமாக நேற்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் முப்படைத் தளபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர். அதன்படி பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்‌ஷ மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து சினேகபூர்வமாக கலந்துரையாடினர். இதன்போது நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

Read More