Author: admins

மேஷம்இன்று அனைவரிடமும் இன்முகத்துடன் பழகுவீர்கள். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். பயணங்கள் செல்ல நேரிடும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1,2 ரிஷபம்இன்று விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். தொழில் வியாபாரம் மந்தநிலை மாறும். சாதூரியமான பேச்சின் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 மிதுனம்இன்று விலகி சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான செயல்கள் மூலம் காரிய வெற்றி காண்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6 கடகம்இன்று…

Read More

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30ஆம் திகதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரத்த நாள வீக்க (அன்யூரிஸம்) பாதிப்புக்குள்ளான அவருக்கு இடையீட்டு சிகிச்சை மூலம் ஸ்டென்ட் உபகரணம் பொருத்தப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் நிலை சீராக இருந்ததையடுத்து வாா்டுக்கு மாற்றப்பட்டாா். இந்த நிலையில், தற்போது தனது வழக்கமான பணிகளை அவரே மேற்கொள்வதாகவும், வீடு திரும்புவதற்கான உடல் தகுதியுடன் அவா் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று அதிகாலை மருத்துவமனையில் இருந்து ரஜினிகாந்த் தனது வீட்டுக்குத் திரும்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி நடித்திருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் எதிர்வரும் 10 ஆம் திகதி வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஈரான், இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதல் மத்திய கிழக்கில் பெரும் போராக மாறி, எண்ணெய், எரிபொருள் விநியோகத்தில் இடையூறு செய்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. Brent, WTI இரண்டு எண்ணெய் ரகங்களின் விலையும் ஐந்து சதவீதம் வரை உயர்ந்தது. கிட்டத்தட்ட ஓராண்டில் காணாத விலையேற்றம் அதுவாகும். மத்திய கிழக்கில் போர் வெடித்தால், உலகத்துக்கு வரும் எண்ணெயில் மூன்றில் ஒரு பகுதி பாதிக்கப்படலாம். கடந்த ஆண்டு நிலவரப்படி, எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஈரான் ஏழாவது இடத்தில் உள்ளது. தினமும் மூன்று முதல் நான்கு மில்லியன் பீப்பாய் எண்ணெயை உற்பத்தி செய்யும் நாடு ஈரான் ஆகும். அது மட்டுமல்லாமல், உலகின் அதி முக்கியமான எண்ணெய் விநியோகச் சந்திப்பான Hormuz நீரிணை ஈரானுக்குப் பக்கத்தில் உள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் திடீரென 180 ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலின் அயல்நாடான ஜோர்தானின் வான்பரப்பில் அவ் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டு, தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.

Read More

தமிழ் சினிமாவில் மதராசபட்டனம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான எமி ஜாக்சன், தாண்டவம், ஐ, கெத்து, தெறி, எந்திரன் உள்ளிட்ட படங்களில் நடத்து உள்ளார். இந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன் தொழிலதிபர் ஜார்ஜூடனை காதலித்து வந்தார். திருமணம் ஆகாமலேயே இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்பு கருத்து வேறுபாட்டால் அவர்களுக்குள் கடந்த ஆண்டு பிரிவு ஏற்பட்டது. தனது மகன் ஆண்ட்ரியாசுடன் தனியாக வாழ்ந்து வந்த எமி ஜாக்சன் இங்கிலாந்து நடிகர் எட்வர்டு வெஸ்ட்விக்கை காதலித்து வந்தார். இந்நிலையில், காதலன் எட்வர்டு வெஸ்ட்விக்கை நடிகை எமி ஜாக்சன் திருமணம் செய்துகொண்டார். இருவரின் திருமணம் இத்தாலி நாட்டின் அமல்ஹி கடற்கரை பகுதியில் நடைபெற்றது. எமி ஜாக்சனின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Read More

இலங்கையில் சுகாதாரத்துறையில் பணியாற்றுகின்ற 550 பேருக்கு அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான வாய்ப்பொன்று கிட்டியிருக்கும் நிலையில், அதற்கான ஆட்சேர்ப்பானது, வெளிப்படைத்தன்மையின்றி நிறைவுக்கு வந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவர் மஹிந்த சமரசிங்கவின் முயற்சிகளையடுத்து, இலங்கையின் சுகாதாரத்துறையில் உள்ள 550 பேருக்கு ஐக்கிய அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பமொன்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுகாதாரத்துறையில் பணியாற்றுகின்ற 250 தாதியர்கள், 100 இரசாயன பரிசோதகர்கள், 200 தாதிய உதவியாளர்கள் ஆகியோருக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.  03.01.2023 திகதியிடப்பட்ட கடித பரிமாற்றங்களுக்கமைய, அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான மேற்படி பணியிடங்கள் பற்றிய விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டன. ஆனால், குறித்த கடித பரிமாற்றத்தின் பின்னர்,  அது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் குறித்த பணியிடங்களுக்கு தெரிவுசெய்யப்படுவதற்காக பின்பற்றப்பட்ட முறைமை, தெரிவுசெய்யப்பட்டவர்களின் பெயர் விபரக்கோவை உள்ளிட்ட எந்த விதமான தகவல்களும் தற்போது வரை வெளியிடப்படவில்லை. கட்டுரையாளரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கமைய, சுகாதார அமைச்சில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இவ்விடயம் சம்பந்தமாக தகவல்களை வழங்க மறுத்துவிட்டனர்.…

Read More

மேஷ ராசி புதிய நபர்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். பேச்சுவன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். சக ஊழியர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். லாபம் மேம்படும் நாள். ரிஷப ராசி உறவினர்களால் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். புதிய செயல்களில் திட்டமிட்டு செயல்படவும். வியாபார பணிகளில் இழுபறியான சூழ்நிலை உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். நன்மை நிறைந்த நாள். மிதுன ராசி திடீர் திருப்பங்கள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். குடும்பத்தில் சில மன வருத்தம் நேரிடும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். அரசு பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.  கடக ராசி…

Read More

விஜய்யின் கடைசிப் படம் ‘விஜய்69’ பற்றி பேசும்போதே சென்டிமென்ட்டாக ரசிகர்கள் நினைக்கும்போது, இப்படம் பூஜை தொடங்கும் முன்பே இப்படத்திற்கு புதிய சர்ச்சை எழுந்துள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கேவிஎன் புரடக்சன்ஸ்’ தயாரிப்பில் விஜய்யின் கடைசிப் படமான விஜய்69 உருவாகவுள்ளது. அவரது அரசியல் வருகைக்கும் வரும் 2026 தேர்தலுக்கு அடித்தளமான அரசியல் கதைக்களத்துடன் இப்படம் உருவாகவுள்ளதாகவும், விஜய்யை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் சமூக அக்கறை கொண்ட படமாக இப்படத்தை வினோத் செதுக்கி வருவதாக தகவல் வெளியாகிறது. இப்படத்தின் ஸ்டார் காஸ்டிங் பட்டியலை படக்குழு வெளியிட்டு வரும் நிலையில் அனிமல் பாபி தியோல், பூஜா ஹெக்டே உள்ளிட்டோரை அறிமுகம் செய்துள்ளது. இப்படம் பான் இந்தியா படமாக உருவாகும் நியலியில், இனி நட்சத்திரங்கள் ஒவ்வொருவராக அறிமுகம் செய்யப்படவுள்ளனர்.

Read More

ஊழலற்ற சிறந்த ஆட்சியை உருவாக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேயாகி (Mizukoshi Hideaki தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேயாகி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்கவிற்கு தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்த ஜப்பானிய தூதுவர், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு ஜப்பான் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Read More

கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் உள்ளிட்ட ரசிகர்களுக்கு விருப்பமான ஆளுமைகள் இருந்த இந்தியன் 2 இந்தளவுக்கு மோசமாக உருவாக்கப்பட்டிருக்குமா எனும் அளவுக்குப் படம் இருந்தது. சமூகவலைதளங்களில் படம் பெரியளவில் கேலிகளுக்கு உள்ளானது. படத்தின் பலக் காட்சிகளை பகிர்ந்து அதை ரசிகர்கள் ட்ரோல் செய்யுமளவுக்கு சென்றது. அதனால் திரையரங்க வசூலில் வீழ்ச்சியை சந்தித்தது. படம் ஓடிடியில் வெளியான போது ட்ரோல்கள் பல மடங்கு அதிகமாகின. இதனால் இந்தியன் 3 படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பே இல்லை எனும் நிலைதான் உள்ளது. மேலும் இந்தியன் 2 படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதால், இந்தியன் 3 வௌியாகும் போது அவர்கள் குறைவான விலைக்குக் கேட்க வாய்ப்பிருக்கிறது என சொல்லப்படுகிறது. இதனால் இப்போது இந்தியன் 3 திரைப்படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்துவிடலாமா என்ற முயற்சிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது

Read More

பாங்காக்கிற்கு வெளியே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் 20 குழந்தைகள் மற்றும் மூன்று ஆசிரியர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தாய்லாந்து நாட்டின் வடக்கே பள்ளிப் பயணத்தை முடித்துக் கொண்டு தாய்லாந்து தலைநகருக்குத் திரும்பிக் கொண்டிருந்தத பேருந்து, ஒரு மேம்பாலத்தின் கீழ் பேருந்து எரிந்தபோது, ​​​​அடர்ந்த கரும் புகையின் பெரிய மேகங்கள் வானத்தில் குவிந்ததால், அந்த காட்சியின் வீடியோக்கள் பேருந்தில் தீப்பிடிப்பதைக் காட்டியது. பாங்காக்கிற்கு வடக்கே 100 கிமீ (61 மைல்) தொலைவில் உள்ள காவல்துறையினரிடம் ஓட்டுனர் தன்னை ஒப்படைத்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே எடுக்கப்பட்ட காட்சிகள் ஓட்டுநர் தீயை அணைக்க முயற்சிப்பதைக் காட்டியது, ஆனால் அவர் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார். முன்பக்க டயர் வெடித்ததால், பாங்காக்கிற்கு வடக்கே நெடுஞ்சாலையைப் பிரிக்கும் கான்கிரீட் தடுப்புச் சுவரில் பேருந்து மோதியதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். பேருந்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால், பலரால் வெளியே…

Read More