Friday, January 3

அமெரிக்காவில் இரவில் காணாமல் போன 3 வயது குழந்தை 100 ஏக்கர் மக்காச்சோள தோட்டத்திற்குள் தன்னந்தனியாக தவித்ததை ட்ரோன் மூலம் கண்டுபிடித்து காவல்துறையினர் மீட்டனர்.

விஸ்கான்சின் மாகாணத்தின் ஆல்டோ பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு 8:49 மணிக்கு தங்கள் 3 வயது மகனை காணவில்லை என பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

வீட்டின் பின்புறம் இருந்த மக்காச்சோள தோட்டத்திற்குள் குழந்தை சென்றிருக்கலாம் என அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் தெர்மல் இமேஜிங் டிரோன் மூலம் குழந்தையை தேடிய நிலையில், ஒரு மணிநேர தேடுதலுக்குப் பின் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது.

எந்த காயமும் இன்றி குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். வீட்டில் இருந்து அரை மைல் தொலைவில் குழந்தை இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.

Share.
Leave A Reply

Exit mobile version