Sunday, November 24

சுவிஸ் நகரமொன்றில், தண்ணீரில் நச்சுப்பொருள் ஒன்று கலந்ததால், அந்த தண்ணீரை பயன்படுத்தவேண்டாம் என அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்திலுள்ள Carouge என்னுமிடத்தில், ஷவரில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணொருவரின் தலைமுடி பச்சை நிறமாக மாறவே, அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அத்துடன், குழாயில் வந்த தண்ணீரைக் குடித்த பலருக்கு வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்பு மற்றும் தொண்டை அழற்சி முதலான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

என்ன பிரச்சினை?

அதாவது, தண்ணீர்க்குழாய்களில் படிந்துள்ள அழுக்கு, உப்பு முதலானவற்றை அகற்றுவதற்காக, ஒரு ரசாயனத்தை பயன்படுத்தியுள்ளார்கள் சில அலுவலர்கள்.

அந்த ராசாயனம் சுடுதண்ணீரைக் கொண்டு செல்லும் குழாய்களில் கலந்துவிட்டிருக்கிறது. அது நச்சுப்பொருளாக மாற, தண்ணீரைப் பயன்படுத்தியோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அந்த ரசாயனம் கலந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்றும் பணி நடைபெற்றுவரும் நிலையில், குடிப்பது, பாத்திரம் கழுவுவது முதலான எந்த விடயத்துக்கும் அந்த தண்ணீரைப் பயன்படுத்தவேண்டாம் என பொதுமக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

மக்களுடைய உடனடித் தேவைகளுக்காக, தெருக்களில் தண்ணீர் குழாய்களை குடிநீர் விநியோக நிறுவனங்கள் அமைத்துவருவதுடன், தண்ணீர் போத்தல்களும் விநியோகிக்கப்பட்டுவருகின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version