Thursday, November 21

சுவிட்சர்லாந்தில், உடற்குறைபாடு கொண்ட தங்கள் குழந்தையைக் கொலை செய்த பெற்றோருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Aargau மாகாணத்திலுள்ள Hägglingen என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த 34 வயது நபரும் அவரது மனைவியான 32 வயதுப் பெண்ணும். 2020ஆம் ஆண்டு, மே மாதம் 6ஆம் திகதி, தங்கள் மகளைக் கொலை செய்தார்கள்.

அந்த மூன்று வயதுச் சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து சுயநினைவிழக்கச் செய்து, பின்அவளது மூச்சை நிறுத்தியுள்ளார்கள் அந்த தம்பதியர்.

பிறவியிலேயே மூளையில் இருந்த பிரச்சினையால், அந்தச் சிறுமி உடற்குறைபாட்டுடன் பிறந்திருந்தாள்.

தங்கள் மகள் அனுபவிக்கும் கஷ்டங்களைக் காண சகிக்காமல், அவளது, வலி, பக்கவாதம், வலிப்பு போன்ற பல பிரச்சினைகளிலிருந்து அவளை விடுவிபதற்காகவே அவர்கள் தங்கள் மகளைக் கொலை செய்ததாக அவர்களுடைய சட்டத்தரணிகள் வாதிட்டார்கள்.

அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்குமாறு அவர்கள் நீதிமன்றத்தைக் கோரினார்கள்.

ஆனால், அந்தச் சிறுமியின் நிலைமை முன்னேற வாய்ப்பு இருந்தது என்று கூறி வாதிட்ட அரசு சட்டத்தரணிகள், அவள் தங்களுக்கு இடைஞ்சலாக இருந்ததாலேயே சுயநலத்தால் அவளை அவளுடைய பெற்றோர் கொன்றுவிட்டதாக வாதம் முன்வைத்தார்கள்.

ஆகவே, அவர்களுக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கவேண்டும் என அவர்கள் நீதிமன்றத்தைக் கோரினார்கள்.

இருதரப்பு விவாதத்தையும் கேட்ட நீதிபதிகள், அந்த தம்பதிக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version