Thursday, January 2

இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், இன்று முதல் தேர்தல் நடைபெறும் தினம் வரை தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்துக்குச் சென்று வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் சுமார் 97 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும்  தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 14 ஆம் திகதி நிறைவடைந்துள்ளதாகவும், இதுவரை உத்தியோக பூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள், இன்று முதல் தேர்தல் நடைபெறும் தினம் வரை தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்துக்குச் சென்று வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை, பல்கலைக்கழகங்களின் பணியாட்குழுவினருக்கும் மாணவ, மாணவிகளுக்கும் வாக்களிப்பதை இலகுபடுத்தும் வகையில் விடுமுறை வழங்குதல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version