Sunday, November 24

இன்ஸ்டாகிராம் பதின்ம வயதினருக்காக செயல்படும் விதத்தை மாற்றியமைக்கிறது, மேலும் இளைஞர்களுக்கு மேலும் உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்புகளை வழங்குவதையும் அது உறுதி செய்துள்ளது.

அதன்படி பிரபல மெட்டா நிறுவனம், 18 வயதுக்குட்பட்ட பயனர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு, சில மேம்படுத்தப்பட்ட தனியுரிமை மற்றும் Parental Guidanceகளை இப்பொது அறிமுகப்படுத்தியுள்ளது.

அத்தகைய கணக்குகளின் (18 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் இன்ஸ்டா கணக்குகள்) பயனர்கள் அவர்கள் பின்தொடரும் அல்லது ஏற்கனவே இணைப்பில் இருக்கும் கணக்குகளிடம் இருந்து மட்டுமே மெசேஜ்களை பெறமுடியும். மேலும் அவர்களால் மட்டுமே ஒரு போஸ்டில் அவர்களை டேக் செய்யமுடியும். அதுமட்டுமல்லாமல் 16 வயதிற்குட்பட்ட பயனர்கள், பெற்றோரின் அனுமதியுடன் மட்டுமே இயல்புநிலை அமைப்புகளை தங்களது இன்ஸ்டா கணக்கை மாற்ற முடியும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் யாருடன் பேசி பழகுகிறார்கள் என்பதைக் கண்காணிக்கவும், இன்ஸ்டாகிராம் கணக்கை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும் உரிமை பெறுவார்கள்.

புதிய பதின்ம வயதினருக்கான கணக்குகள் செவ்வாய் முதல் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version