Thursday, January 2

சில அமைச்சர்கள் அரச வாகனங்கள் முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிரடி பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் , ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான பல வாகனங்கள் காலி நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதை காணலாம் .

மேலும் , ஜனாதிபதி செயலகத்தினூடாக பல்வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட 97 அரச வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக நேற்று மேற்கொண்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே ஆட்சில் இருந்து விலகிய பின்னர் புதிய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்த அடுத்த சில நாட்களுக்குள் குறித்த அந்த வாகனங்களை பயன்படுத்தியவர்கள் வாகனங்களை நிறுத்தியுள்ளதாக இன்று அந்த இடத்திற்கு விஜயம் செய்த தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version