Sunday, November 24

நாட்டின் புதிய ஜனாதிபதியான அநுர குமார திசாநாயக்க நேற்றைய நாளன்று கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் சென்று ஆசி பெற்றார்.

அவரது உத்தியோகபூர்வ வீடிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, பேராயரைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன் சில கருத்துக்கள் நிரைந்த பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளது

இங்கு கருத்து தெரிவித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை,

இலங்கையின் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தினால் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அநு ரகுமார திசாநாயக்கவுக்கு எனது வாழ்த்துக்களை கூறிக்கொள்வதோடு , இந்த அற்புதமான சந்தர்ப்பத்தில் இலங்கையில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்தும் பாரிய பொறுப்பை நாட்டு மக்கள் உங்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது மிக முக்கிய பொறுப்பாகவும் , கடமையாகவும் அதற்காக அவருக்கு நாம் முழு ஆதரவையும் ஆசிகளையும் வழங்குவோம் என்று உறுதியளிக்கிறோம். குறிப்பாக இந்நாட்டின் வறிய மக்களைப் பற்றி சிந்தித்து உங்கள் பணியை தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்

மற்றும் புதிய ஜனாதிபதியான அனுரகுமார திசாநாயக்க உண்மையை வெளியே கொண்டுவரத் தேவையான அடித்தளத்தை தயார் செய்ய முடிந்த அனைத்தையும் செய்வதாக மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, அவர்களுக்கு உறுதியளித்ததாகத் தெரிவித்துள்ளார் .

Share.
Leave A Reply

Exit mobile version