Thursday, January 2

மேஷ ராசி

புதிய நபர்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். பேச்சுவன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். சக ஊழியர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். லாபம் மேம்படும் நாள். 

ரிஷப ராசி

உறவினர்களால் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். புதிய செயல்களில் திட்டமிட்டு செயல்படவும். வியாபார பணிகளில் இழுபறியான சூழ்நிலை உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். நன்மை நிறைந்த நாள்.

மிதுன ராசி

திடீர் திருப்பங்கள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். குடும்பத்தில் சில மன வருத்தம் நேரிடும்.  எதிலும் பொறுமையுடன் செயல்படவும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். அரசு பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.

 கடக ராசி

சூழ்நிலைகளை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவீர்கள். அரசு பணியில் சாதகமான சூழல் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். உங்களை பற்றிய புதுவிதமான புரிதல் ஏற்படும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தனம் நிறைந்த நாள்.

 சிம்ம ராசி

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனவள கலையில் நாட்டம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறிகள் மற்றும் பாக்கிகள் வசூலாகும். புதுவித பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

 கன்னி ராசி

நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். முயற்சிக்கு ஏற்ப சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் திருப்தியான சூழ்நிலை ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

 துலாம் ராசி

பணிகளில் பொறுப்புகளும், அலைச்சலும் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். மற்றவர்கள் பற்றி கருத்துகளை கூறும்போது சிந்தித்துச் செயல்படவும். நண்பர்களிடத்தில் பயனற்ற வாதங்களை தவிர்க்கவும். வாகன பயணங்களின்போது நிதானம் வேண்டும். வியாபார செயல்களில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

விருச்சிக ராசி

அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவும், புத்துணர்ச்சியும் உண்டாகும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் மேம்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் வழியில் ஆதாயம் ஏற்படும். வாகனம் தொடர்பான பழுதுகளை சீர் செய்வீர்கள். தாமதம் நிறைந்த நாள்.

தனுசு ராசி

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும். நலம் நிறைந்த நாள்.

மகர ராசி

பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வாக்குவாதம் குறையும். மனதில் இருந்துவந்த நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து புதிய வழிமுறைக்கு கொண்டு வருவீர்கள். உயர் கல்வி சார்ந்த துறைகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை ஏற்படும். கோபம் விலகும் நாள்.

கும்ப ராசி

உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். புதிய கூட்டாளிகளை இணைப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வழக்கு செயல்பாடுகளில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த இடைவெளிகள் குறையும். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகளை அறிவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். திறமை நிறைந்த நாள்.

மீன ராசி

சகோதர உறவுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகன வசதிகள் மேம்படும். தைரியமான செயல்பாடுகளின் மூலம் பொறுப்புகளும், பாராட்டுகளும் கிடைக்கும். செயல்பாடுகளில் வேகத்தைவிட விவேகம் அவசியம். 

Share.
Leave A Reply

Exit mobile version