நடிகராக மட்டுமின்றி துப்பாக்கிச் சுடும் வீரர், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய வீரர், ட்ரோன் வடிவமைப்பாளர் உட்பட பன்முகம் கொண்டவராக திகழ்ந்து வரும் அஜித் குமாருக்கு, இந்திய அரசின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது அறிக்கப்பட்டுள்ளமை அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படுகின்றன.
பொது சேவைத்துறையின் அனைத்து நடவடிக்கைகளிலும் அல்லது துறைகளிலும் சாதனைகள் செய்தவர்களை அங்கீகரிப்பதற்காக பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் பிரதமரால் அமைக்கப்பட்ட பத்ம விருதுகள் குழுவின் பரிந்துரையின் பேரில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் இவ்வருடமும் 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 19 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.