காசாவில் 2500 சிறுவர்களிற்கு உடனடி மருத்துவசிகிச்சை தேவைப்படுவதாக கடந்த வருடம் ஏப்பிரல் முதல் மே மாதம் வரை காசாவில் பணியாற்றிய கலிபோர்னியாவை சேர்ந்த மருத்துவர் பெரோஸ் சித்வா தெரிவித்துள்ளார்.
அடுத்த சில வாரங்களில் உயிரிழக்கும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள 2500 சிறுவர்கள் உள்ளனர்,சிலர் உயிரிழந்துகொண்டிருக்கின்றனர்,சிலர் நாளை அல்லது நாளை மறுதினம் உயிரிழக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த 2500 பேரில் அனேகமானவர்களிற்கு சாதாரண சிகிச்சை போதும் என தெரிவித்துள்ள அவர் 3வயது சிறுவனிற்கு கையில் எரிகாயம் ஏற்பட்டுள்ளது,
அந்த காயம் ஆறிவிட்டது,ஆனால் காயம்பட்ட திசு இரத்த ஓட்டத்தை துண்டிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது இதனால் அந்த சிறுவனிற்கு ஆபத்து என அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்டான்போர்ட் பல்கலைகழக மருத்துவமனையின் அவசரசேவை மருத்துவர் ஆயிசா கானும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி முதலாம் திகதி வரை காசாவில் மருத்துவசேவையை வழங்கியுள்ளார்.
அவர் கைதுண்டிக்கப்பட்ட பல சிறுவர்கள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளதுடன் அவர்களிற்கு புனர்வாழ்வு இல்லை என தெரிவித்துள்ளார்.