பழம்பெரும் நடிகையான ‘சி.ஐ.டி சகுந்தலா மாரடைப்பு காரணமாக தனது 85 ஆவது வயதில் நேற்று உயிரிழந்தார்.
பின்னணி நடனக் கலைஞராக சினிமாவில் கால் பதித்த நடிகை சகுந்தலா,தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அவர் நடித்த நேதாஜி (1996), நான் வணங்கும் தெய்வம் (1963), கை கொடுத்த தெய்வம் (1964) உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சி.ஐ.டி சங்கர் (1970) படத்தில் ஜெய்சங்கருக்கு ஜோடியாக இவர் நடித்தார். அதன் பிறகு இவரை ‘சி.ஐ.டி சகுந்தலா’ என்று அன்புடன் அழைக்கப்பட்டார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘பொன்மானை தேடி’. அதன் பின்னர் பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார்.
அதன்பிறகு வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்த அவருக்குஇ இன்று (செப்.17) நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சகுந்தலாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.