Friday, November 22

துபாயை சேர்ந்தவர் தொழிலதிபர் ஜமால் அல்நடக். கோடீஸ்வரரான இவரது மனைவி சவுதிஅல்நடக் . இங்கிலாந்தில் பிறந்த சவுதி அல்நடக் துபாயில் படித்துக்கொண்டிருந்த போது ஜமால் அல்நடக்கை சந்தித்துள்ளார். பின்னர் இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.

கணவர் மனைவி மீது அதீத காதல் , ஆகையால் தனது மனைவி நீச்சல் (பிகினி) உடையில் குளிப்பதற்காக ஆசைப்பட்ட நிலையில் அவருக்காக ஜமால் அல்நடக் ஒரு தீவையே விலைக்கு வாங்கியுள்ளார்.

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக தீவின் சரியான இருப்பிடத்தை வெளியிட சவுதிஅல்நடக் மறுத்து விட்டடார்.

ஆனால் தனக்காக தனது கணவர் ஜமால் அல்நடக் தீவை வாங்குவதற்காக 50 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 418 கோடி) செலவிட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து சவுதிஅல்நடக் கூறுகையில், எனது கணவர் வாங்கிய தீவு ஆசியாவில் உள்ளது. தனியுரிமை காரணங்களுக்காக நாங்கள் தீவின் சரியான இடத்தை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்றார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவுதிஅல்நடக்கின் பிறந்தநாளன்று அவரது கணவர் ரூ.60 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பரிசாக கொடுத்ததாக சவுதிஅல்நடக் வீடியோ வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Share.
Leave A Reply

Exit mobile version