குளிர்பானங்கள் தயாரிப்பு நிறுவனமான கோக கோலா (Coca-Cola) ஐரோப்பா முழுவதும் உள்ள சில நாடுகளில் அதன் பானங்களில் “குளோரேட்டு” எனப்படும் அதிக அளவு இரசாயனங்கள் இருப்பதால் அவற்றை திரும்பப் பெறுவதாக செய்தி வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தயாரிப்புகளில் கோக், ஃபாண்டா, மினிட் மெய்ட், ஸ்ப்ரைட் மற்றும் டிராபிகோ பிராண்டுகள் அடங்கும் என்று கோக கோலாவின் சர்வதேச பாட்டில் மற்றும் விநியோக நடவடிக்கையின் பெல்ஜியக் கிளை தெரிவித்துள்ளது.
2024 நவம்பர் முதல் பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்தில் அதிக அளவு குளோரேட்டு கொண்ட கேன்கள் மற்றும் கண்ணாடி போத்தல்களில் கோகோ கோலா பானங்கள் விநியோகிக்கப்படுவதாக நிறுவனம் திங்களன்று தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள ஏதேனும் கோகோ கோலா தயாரிப்புகளில் அதிக அளவு குளோரேட்டு உள்ளதா என ஆய்வு செய்து வருவதாக உணவு தர நிர்ணய நிறுவனம் உறுதி செய்துள்ளது.
குளோரேட்டு உணவுகளில் காணப்படுகிறது, ஏனெனில் இது நீர் சுத்திகரிப்பு மற்றும் உணவு பதப்படுத்துதலில் பரவலாக பயன்படுத்தப்படும் குளோரின் கிருமிநாசினிகளிலிருந்து பெறப்படுகிறது.+