இலங்கை நாடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெலியத்த பகுதியில் வைத்து இன்று காலை அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்றின் உரிமை தொடர்பில் யோஷித ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த வகையில் கடந்த ஜனவரி 03 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலமொன்றை பெற்றுக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

Share.
Leave A Reply

Exit mobile version